பாகம்-9
இப்பகுதியில் “காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்யம்” என்னும் ப்ராயச்சித்தார்க்யம் பற்றிப் பார்க்கலாம்.
ப்ராயச்சித்தார்க்யம் ||9||
ப்ராணாயாம: ||
ஓம் பூ: | ஓம் புவ: | ஓகும் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓகும் ஸத்யம் ||
ஓம் தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
ஓமாபோ ஜ்யோதீ
ரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவ-ரோம் ||
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் || (அர்க்யம்)
ப்ராயச்சித்தார்க்யம் (காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்யம்) :
ப்ராணாயாமம்: (ஓம் பூ:) ஓம்காரமே பூலோகம்; (ஓம் புவ: ) ஓம்காரமே புவர்லோகம்; (ஓகும் ஸுவ: ) ஓம்காரமே ஸுவர்லோகம்; (ஓம் மஹ: ) ஓம்காரமே மஹர்லோகம்; (ஓம் ஜந: ) ஓம்காரமே ஜநலோகம்; (ஓம் தப: ) ஓம்காரமே தபோலோகம்; (ஓகும் ஸத்யம்) ஓம்காரமே ஸத்யலோகம்
(ஓம்) ஓம்காரப் பொருளான, (ய: ) எந்த பரமாத்மா (ந: ) நம்முடைய (திய: ) புத்தி மற்றும் சக்திகளை (ப்ரசோதயாத்) தூண்டுகிறாரோ, (தத்) அந்த (ஸவிது) அனைத்தையும் படைக்கிறவரான (தேவஸ்ய) பகவானுடைய (வரேண்யம்) சிறந்த (பர்க்க: ) ஜ்யோதிஸ்வரூபத்தை (தீமஹி) த்யானிப்போம். (ஓம்) ஓம்காரமே (ஆப:) ஜலமும் (ஜ்யோதி:) ஒளியும் (ரஜ:) ரஸம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும் (அம்ருதம்) உயிருக்கு ஆதாரமான வாயுவும் (ப்ரஹ்ம) எங்கும் பரந்த ஆகாசமும். (பூர்ப்புவஸ்ஸுவ-ரோம்) பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதிகள் குறிப்பிடும் மனம், புத்தி, அஹங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே!
அர்க்யம் – முன்போல் ஒரு தடவை. “ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:” என்று ஆத்ம ப்ரதிக்ஷிணமும் பரிஷேசனமும்.
செய்முறை: ப்ராயச்சித்த அர்க்யம் விட்டபின் “ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:” என்று தலையைச் சுற்றி பரிஷேசனம் செய்து, நின்றவிடத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள வேண்டும்.
அர்க்யப்ரதானத்தால் அகத்திலுள்ள ‘சத்’ உருவத்தின் ஜயம் சித்திக்கின்றது.
அடுத்த பகுதியில் “ஐக்யாநுஸந்தானம்” மற்றும் “தேவ தர்ப்பணம்” ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.
No comments:
Post a Comment