பாகம்-7
இப்பகுதியில் “மீண்டும் ஒருமுறை ஜலதேவதைகளிடம் வைக்கும் கோரிக்கை” என்னும்
“புநர்மார்ஜநம்” என்ற மந்த்ர ப்ரயோகத்தைப் பற்றிப்
பார்க்கலாம்.
புநர்மார்ஜநம் ||7||
ஆசமநம்
அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)
அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)
கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)
கேசவ, நாராயண – கட்டை விரலால் வலது இடது கன்னங்களை முறையே ஸ்பர்சிக்க வேண்டும்.
மாதவ, கோவிந்த – பவித்ர விரலால் நமது இரு கண்களை முறையே ஸ்பர்சிக்க
வேண்டும்.
விஷ்ணோ, மதுஸூதந – ஆள்காட்டி விரலால் நாசியின் இருபுறங்களிலும்
(பெண்கள் மூக்குத்தி போட்டுக் கொள்ளுமிடங்கள்) ஸ்பர்சிக்க வேண்டும்.
த்ரிவிக்ரம, வாமந – சுண்டுவிரலால் வலது இடது காதுகளை ஸ்பர்சிக்க வேண்டும்.
ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – நடுவிரலால் வலது இடது தோள்களை ஸ்பர்சிக்க
வேண்டும்.
பத்மநாப, தாமோதர – உள்ளங்கையால் ஹ்ருதயத்தையும் உச்சந்தலையையும்
ஸ்பர்சிக்க வேண்டும்.
மேற்கண்ட மந்த்ரங்களுக்கான அர்த்தம், ஏன் செய்கிறோம் என்பதற்கான விளக்கம் பாகம்-1-ல் தந்துள்ளதால், மீண்டும் இங்கே தரவில்லை. எவரேனும் இப்பதிவை முதன் முறையாகப் படிக்கிறீர்கள் எனில், #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_பாகம்_1 என்ற இணைப்பின் மீது சொடுக்கினால், அர்த்தம், காரணம் இவற்றைப் படிக்கலாம். இனி, மார்ஜநம்.
ததிக்ராவ்ண்ணோ அகாரிஷம் | ஜிஷ்ணோ-ரஸ்வஸ்ய வாஜிந: | ஸுரபி நோ முகாகரத் | ப்ரண ஆயூஷி தாரிஷத் ||
ஆபோ ஹிஷ்டா மயோ புவ: | தா ந ஊர்ஜே ததாதந | மஹே ரணாய சக்ஷஸே | யோ வ: சிவதமோ ரஸ: | தஸ்ய பாஜயதேஹ ந: | உசதீரிவ மாதர: | தஸ்மா அரம் கமாம வ: | யஸ்ய க்ஷயாய ஜின்வத | ஆபோ ஜநயதா ச ந: | ஓம் பூர்ப்-புவஸ்-ஸுவ: (ஆத்ம பரிஷேசனம்)
புநர்மார்ஜநம் (மீண்டும் ப்ரோக்ஷணத்தால் மந்த்ரஸ்நாநம்) :
(ததிக்ராவ்ண): அனைத்துலகத்தையும் தாங்குபவனும், ஆள்பவனும், அளப்பவனும், (ஜிஷ்ணோ:) ஜயசீலனும், (அச்வஸ்ய) ஸகல வித்தைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவ வடிவமெடுத்தவனும் (வாஜிந:) வேகவானுமாகிய பரம புருஷனுக்கு (அகாரிஷம்) வந்தனம் செய்கிறேன். (ந:) நம்முடைய (முகா:) முகத்தையும் மற்ற இந்த்ரியங்களையும் (ஸுரபி) நன்மணம் உடையவைகளாக (கரத்) அவர் செய்தருள வேண்டும். (ந:) நம்முடைய (ஆயும்ஷி) ஆயுளை (ப்ரதாரிஷத்) இடையூறு இல்லாமற் காக்க வேண்டும்.
(ஆப:) ஜல தேவதைகளாகிய நீங்கள் (மயோ புவ:) உயர்ந்த சுகத்துக்குக் காரணமாக (ஷ்ட்டா ஹி = ஸ்த்தாஹி) இருக்கிறீர்கள் என்பது ப்ரசித்தம். (தா:) அப்படிப்பட்ட நீங்கள் (ந:) எங்களுக்கு (மஹே) மஹிமை பொருந்தியதும், (ரணாய) ரமணீயமானதுமான (சக்ஷஸே) ஞானக் கண்ணின் பொருட்டு (ஊர்ஜே) போஷணையை (ததாதன) அளியுங்கள்! (வ:) உங்களிடம் (ய:) எந்த (சிவதம:) பரம மங்களமான (ரஸ:) பேரின்ப ரஸம் உள்ளதோ, (தஸ்ய) அதற்கு (இஹ) இங்கேயே (ந:) எங்களை (உசதீ:) அன்பு சுரக்கும் (மாதர: இவ) தாய்மார்களைப் போல் (பாஜயத) உரியவர்களாக்குங்கள்! (யஸ்ய க்ஷயாய) எந்த ரஸத்தை நிலையாக வழங்கும் பொருட்டு (ஜின்வத) நீங்கள் இன்ப வடிவாக விளங்குகிறீர்களோ, (தஸ்மை) அந்த ரஸத்திற்காக (வ:) உங்களை (அரம்) மிகவும் ஆர்வத்துடன் (கமாம) நாடுகின்றோம். (ஆப:) ஜலதேவதைகளாகிய நீங்கள், (ந:) எங்களை (ஜநயதா) ஞானத்தால் புனிதமான புநர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக!
புநர்மார்ஜநம் செய்முறை:
முதலில் “ததிக்ராவ்ண” என்ற மந்த்ரங்களாலும், பின் “ஆபோஹிஷ்டா” முதல் ஏழு மந்த்ரங்களாலும் பவித்ர விரலால் ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொண்டு, எட்டாவதால் பாதங்களைத் தொட்டு, ஒன்பதாவதால் மறுபடியும் ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். பின், “ஓம் பூர்ப்-புவஸ்-ஸுவ:” என்று தலையைச் சுற்றி பரிஷேசனம் செய்ய வேண்டும்.
அனைத்துலகத்தையும் தாங்குபவனும், ஆள்பவனும், அளப்பவனும், ஜயசீலனும், ஸகல வித்தைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவ வடிவமெடுத்தவனும் வேகவானுமாகிய பரம புருஷனுக்கு வந்தனம் செய்கிறேன். நம்முடைய முகத்தையும் மற்ற இந்த்ரியங்களையும் நன்மணம் உடையவைகளாக அவர் செய்தருள வேண்டும். நம்முடைய ஆயுளை இடையூறு இல்லாமற் காக்க வேண்டும்.
ஜல தேவதைகளாகிய நீங்கள், உயர்ந்த சுகத்துக்குக் காரணமாக இருக்கிறீர்கள் என்பது ப்ரசித்தம். அப்படிப்பட்ட நீங்கள், எங்களுக்கு மஹிமை பொருந்தியதும், ரமணீயமானதுமான ஞானக் கண்ணின் பொருட்டு போஷணையை அளியுங்கள்! உங்களிடம் எந்த பரம மங்களமான பேரின்ப ரஸம் உள்ளதோ, அதற்கு இங்கேயே எங்களை அன்பு சுரக்கும் தாய்மார்களைப் போல் உரியவர்களாக்குங்கள்! எந்த ரஸத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாக விளங்குகிறீர்களோ, அந்த ரஸத்திற்காக உங்களை மிகவும் ஆர்வத்துடன் நாடுகின்றோம். ஜலதேவதைகளாகிய நீங்கள், எங்களை ஞானத்தால் புனிதமான புநர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக!
ஸகல வித்தைகளுக்கும் அதிபதி ஹயக்ரீவர் என்பதால், நாம் ஹயக்ரீவரை நினைத்து அவரிடம் நம்முடைய கோரிக்கையை வைக்கிறோம். அதற்குப் பின் மீண்டுமொருமுறை மந்த்ரஸ்நாநம் செய்கிறோம்.
அடுத்த பகுதியில் “அர்க்யப்ரதாநம்” பற்றி பார்க்கலாம்.
No comments:
Post a Comment