Sunday, June 13, 2021

பாகம்-13

 

இப்பகுதியில் எவையெவற்றில், யார் எதுவாக இருக்கின்றனர் என்பதைச் சொல்லும்ப்ரணவஜப-ப்ராணாயாமம்என்பது பற்றி பார்க்கலாம்.

ப்ரணவஜப: - ப்ராணாயாம: ||13||

ப்ரணவஸ்ய ருஷிர்-ப்ரஹ்ம, தேவீ-காயத்ரீச் சந்த: பரமாத்மா தேவதா |

பூராதிஸப்த - வ்யாஹ்ருதீனாம் அத்ரிப்ருகுகுத்ஸவஸிஷ்டகௌதமகாச்யபஆங்கிரஸ - ருஷய: ||

காயத்ரீ-உஷ்ணிக்-அனுஷ்டுப்-ப்ருஹதீ-பங்க்தீ-த்ருஷ்டுப்-ஜகதீ-ச்சந்தாம்ஸி ||

அக்நி-வாயு-அர்க்க-வாகீச-வருண-இந்த்ர-விச்வே-தேவாதேவதா: ||

மந்த்ரத்தின் அர்த்தம்:

ப்ரணவஜப: - ப்ராணாயாம: - (ப்ரணவ ஜபமும், ப்ராணாயாமமும்)

(ப்ரணவஸ்ய) ஓம்காரத்திற்கு (ரிஷி: ப்ரஹ்மா) ப்ரஹ்மாவே ரிஷி; (தேவீ காயத்ரீச் சந்த:) தேவீ காயத்ரீ சந்தம்; (பரமாத்மா தேவதா) பரமாத்மா தேவதை. (பூராதி ஸப்தவ்யாஹ்ருதீனாம்) “பூ:” முதலில ஏழு வ்யாஹ்ருதிகளுக்கும் {வ்யாஹ்ருதி என்றால் உலகம்} முறையே (அத்ரிப்ருகுகுத்ஸவஸிஷ்டகௌதமகாச்யபஆங்கிரஸ - ருஷய:) அத்ரி, ப்ருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கிரஸர் ரிஷிகள். (காயத்ரீ-உஷ்ணிக்-அனுஷ்டுப்-ப்ருஹதீ-பங்க்தீ-த்ருஷ்டுப்-ஜகதீ-ச்சந்தாம்ஸி) காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹ்தீ, பங்க்தீ, த்ருஷ்டுப், ஜகதீ என்பவை சந்தங்கள். (அக்நி-வாயு-அர்க்க-வாகீச-வருண-இந்த்ர-விச்வே-தேவாதேவதா:) அக்நி, வாயு, ஸூர்யன், ப்ருஹஸ்பதி, வருணன், இந்த்ரன், விசுவேதேவர்கள் முறையே தேவதைகள்.

ஓம் பூ: | ஓம் புவ: | ஓகும் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓகும் ஸத்யம் ||

ஓம் தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஓமாபோ ஜ்யோதீ ரஸோம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவ-ரோம் ||

இதற்கான அர்த்தம் பாகம்-3-ல் தந்துள்ளதால் மீண்டும் இங்கு தரவில்லை. அர்த்தம் வேண்டுவோர், #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_பாகம்_3 என்ற இணைப்பின் மீது சொடுக்கவும்.

செய்முறை:

ப்ரணவஜப:- ரிஷி-சந்தஸ்-தேவதை: ரிஷியை ஸிரஸிலும், சந்தஸை நாவிலும், தேவதையை ஹ்ருதயத்திலும் த்யானம் செய்ய வேண்டுமென்பதால், “ரிஷி:” என்று ஸிரஸையும், “சந்த:” என்று உதட்டையும், “தேவதாஎன்று மார்பையும் வலது கையால் தொடவும்.


ப்ராணாயாமம்ஏற்கெனவே பாகம்-3-ல் விவரித்துள்ளபடி ஒரு ப்ராணாயாமத்திற்கு மூன்று தடவை மந்த்ரஜபம் அடங்கலாக, மூன்று ப்ராணாயாமம் ஒன்பது தடவை மந்த்ரத்துடன் செய்ய வேண்டும். பூரக ரேசக கும்பக முறையில் மூச்சையடக்க இயலாதவர்கள் மந்த்ரத்தை மட்டும் பத்து தடவையாக ஜபிக்க வேண்டும். ப்ராணாயாமம் செய்யும் போது மூச்சுக் காற்று பட்டு கை அசுத்தமாவதால், அதை சுத்தமாக்க ஒவ்வொரு ப்ராணாயாமத்தின் முடிவிலும் வலது காதைத் (காதில் கங்கை என்னும் அதிதேவதை குடியிருப்பதாக ஐதீகம் என்பதால்) தொடுவது ஸம்ப்ரதாயம்.

மந்த்ர ஜபத்துடன் செய்யும் ப்ராணாயாமம்ஸகர்ப்பம்எனவும், மந்த்ரமில்லாமல் செய்யும் ப்ராணாயாமம்அகர்ப்பம்எனவும் கூறப்படும்.

மூலாதாரத்தில் எழுந்த நாதம் ஏழுபடியில் ஸஹஸ்ராரம் வருகிறது. இதுவே ஏழு வ்யாஹ்ருதிகள். பூ: - ஸன்மாத்ரம்; புவ: - காரணம்; ஸுவ: - மேலழைத்துச் செல்லும் சக்தி; மஹ: - பெரியதும் ஒளி பொருந்தியதும்; ஜன: - அனைத்துமாயிருப்பது (ஸர்வாத்மத்வம்); தப: - ஞானம்; ஸத்யம்ப்ரஹ்மம். இவை ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தின் படிகள். பூ: - ; புவ: - ; ஸுவ: - ; மஹ: - பிந்து; ஜன: - நாதம்; தப: - சக்தி; ஸத்யம்சாந்தம்.


சந்தஸ்காயத்ரீ முதலிய சந்தங்களில் உள்ள அக்ஷரங்களின்ன் எண்ணிக்கை பின்வருமாறு:

காயத்ரீ 24; உஷ்ணிக் 28; அனுஷ்டுப் 32; ப்ருஹ்தீ 36; பங்க்தீ 40; த்ருஷ்டுப் 44; ஜகதீ 48. சந்தம் என்பது வேதகானம் செய்யும் முறையையும் குறிக்கும்.

அடுத்த பகுதியில் மந்த்ரம் மூலம் நமது ஹ்ருதயத்தில் காயத்ரீ தேவியை அமரச் செய்யும்காயத்ரீ ஆவாஹநம்பற்றிப் பார்க்கலாம். 

No comments:

Post a Comment