Sunday, June 13, 2021

பாகம்-20

இப்பகுதியில் யமதர்மனுக்கு வணக்கம் சொல்லும்யம வந்தனம்பற்றிப் பார்க்கலாம்:

யம வந்தனம் ||20||

மந்த்ரம்:

யமாய நம: | யமாய தர்மராஜாய ம்ருத்யவேசாந்தகாய ச வைவஸ்வதாய காலாய ஸர்வபூதக்ஷயாய ச ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே | வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: | சித்ரகுப்தாய வை நம ஓம் நம இதி ||

அர்த்தம்:

யம வந்தனம் – (யமாய நம:) யமனுக்கு நமஸ்காரம். (யமாய) யமனுக்கு (தர்மராஜாய) தர்ம ராஜனுக்கு (ம்ருத்யவே ச) ம்ருத்யுவுக்கும், (அந்தகாய ச) முடிப்பவனுக்கும் (வைவஸ்வதாய) விவஸ்வானுடைய புத்ரனுக்கு, (காலாய) காலஸ்வரூபிக்கு, (ஸர்வ பூதக்ஷயாய ச) எல்லாப் பிசாசுகளையும் ஒழிப்பவனுக்கும், (ஔதும்பராய) மிகவும் பலசாலியாயுள்ளவனுக்கு, (தத்னாய) தத்னன் என்ற பெயருடையவனுக்கு, (நீலாய) கரிய மேனி உடையவனுக்கு, (பரமேஷ்டினே) எல்லோராலும் பூஜிக்கப்பட்டவனுக்கு (வ்ருகோதராய) பெருவயிறு படைத்தவனுக்கு, (சித்ராய) விசித்ரமானவனுக்கு, (சித்ரகுப்தாய வை நம:) விசித்ரமாய் தன்னுடைய ரகசியத்தைக் காப்பவனுக்கு நமஸ்காரம். (சித்ரகுப்தாய வை நம ஓம் நம இதி) “ஓம் நம:” என்று, மீண்டும் சித்ரகுப்தனுக்கு நமஸ்காரம்.

செய்முறை:

தெற்கு நோக்கி நின்று அஞ்சலி செய்து, இம்மந்த்ரத்தால் யமதர்ம ராஜனை வணங்க வேண்டும்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும், யமனுடைய ஆலயத்தை நோக்கி நாம் அனைவரும் நாள்தோறும் அடியெடுத்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். முடிவில், நாம் நேசித்த உடலையும் உயிரையும் அவனுக்கு அர்ப்பணம் செய்வோம் என்று எண்ணுவதால் மனதில் வைராக்யமும், ஞான ஒளியும் ஏற்படும்.

இப்பகுதியில் இடம்பெற்றுள்ள மந்த்ரங்களில் "ய", "வே" மற்றும் "னே" என்று சொற்கள் முடிவுறுவதைக் கண்டிருப்பீர்கள். அவை அவ்வாறு முடிவதற்குக் காரணம், ஸம்ஸ்க்ருத விபக்தி இலக்கணப்படி அச்சொற்கள் நான்காம் வேற்றுமையில் அமைந்துள்ளன.

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமானஹரிஹர வந்தனம்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

No comments:

Post a Comment