Showing posts with label த்ரிகால ஸந்த்யாவந்தனம். Show all posts
Showing posts with label த்ரிகால ஸந்த்யாவந்தனம். Show all posts

Sunday, June 13, 2021

பாகம்-24

இப்பகுதியில்ரக்ஷாஎன்னும் காப்பு மந்த்ரம், அதன் அர்த்தம், செய்முறை இவை குறித்துப் பார்க்கலாம்.

ரக்ஷா ||24||

மந்த்ரம்:

அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம் |

பரா துஷ்வப்னியகும்ஸுவ |

விச்வானி தேவ ஸவிதர்-துரிதானி பரா ஸுவ|

யத் பத்ரம் தன்ம ஆஸுவ ||

இதி ஸந்த்யாவந்தனஉத்தரபாக: ||

 அர்த்தம்:

ரக்ஷா (இரக்ஷை அல்லது காப்பு) – (தேவஸவித:) ஸவித்ரு தேவனே! (அத்ய) இப்போது (:) எங்களுக்கு (ப்ரஜாவத் ஸௌபகம் ஸாவீ:) ஸந்ததிகளுடன் கூடிய ஸௌபாக்யத்தை அருள வேண்டும். (துஷ்வப்னீயம்) கெட்ட கனவின் நிமித்தத்தையும் பலனையும் (பரா ஸுவ) விலக்கியருள்வீர். (யத்) எது (பத்ரம்) உயர்ந்த நன்மையோ (தத்) அதை மே எனக்கு (ஆஸுவ) கூட்டி வைத்து அருளுதல் வேண்டும்.

இங்ஙனம் ஸந்த்யாவந்தன உத்தரபாகத்திற்குப் பதவுரை முற்றிற்று.

செய்முறை:

ஜபம் செய்த இடத்தில் தீர்த்தத்தைப் ப்ரோக்ஷித்து (தெளித்து) பின் குனிந்து வலது பவித்ர விரலால் பூமியைத் தொட்டு இம்மந்த்ரத்தை ஜபித்து, புருவ மத்தியில் இரக்ஷை இட்டுக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட மந்த்ரத்தின் வாயிலாக இரண்டு விஷயங்களை நாம் அறியலாம்:

(1) கனவிலுங்கூட கெட்ட எண்ணங்களும் காட்சிகளும் தோன்றாமலிருந்தால்தான் மனது பரிசுத்தமாயிற்று எனலாம்.

(2) யத் பத்ரம்எது உண்மையில் நமக்கு நன்மை தரும் என்பது நமக்கே தெரியாது. ஆகையால், “எது நன்மையோ, அதைத் தந்தருள்வாய்என்று பகவானிடம் வேண்டிக் கொள்ளுதலே சிறந்தது.

 

இத்துடன் #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_அர்த்தத்துடன் என்னும் இத்தொடர் நிறைவு பெறுகிறது.

பாகம்-23

இப்பகுதியில் ஸமர்ப்பணம் செய்கின்ற மந்த்ரம், அர்த்தம் மற்றும் அதன் செய்முறை குறித்துப் பார்க்கலாம்!

ஸமர்ப்பணம் ||23||

காயேன வாசா மனஸேந்த்ரியைர்-வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

(ஆசமநம்) ||

அர்த்தம்:

ஸமர்ப்பணம் – (காயேன) சரீரத்தாலோ (வாசா) வாக்கினாலோ (மனஸா) மனதாலோ (இந்த்ரியைர் வா) கர்மேந்த்ரியங்களாலோ (புத்த்யாத்மனா வா) ஞானேந்த்ரியங்களாலோ (ப்ரக்ருதே: ஸ்வபாவாத்) இயற்கையின் இயக்கத்தாலோ (யத் யத்) எது எதை (கரோமி) செய்கிறேனோ (ஸகலம்) அது எல்லாவற்றையும் (பரஸ்மை நாராயணா இதி) பரம புருஷனாகிய நாராயணனுக்கே என்று (ஸமர்ப்பயாமி) ஸமர்ப்பிக்கின்றேன்.

செய்முறை:

வலது உள்ளங்கையில் சிறிது தீர்த்தத்தை ஏந்திக் கொண்டு, ஸந்த்யோபாஸனையின் பலனை பரமாத்மா ஸ்ரீமந் நாராயணனுக்கு ஸமர்ப்பணம் செய்வதாய் சிந்தித்து, பின்னர் நுனிவிரல்களின் வழியாகத் தீர்த்தத்தை பூமியில் விட்டுவிட்டு ஆசமநம் செய்ய வேண்டும்.

ஸமர்ப்பணம் முடிந்தபின்பு ஆசமநம் செய்ய வேண்டும்.

ஆசமந மந்த்ரம்:

அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)

அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)

கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)

இனி, விஷ்ணுவின் பன்னிரு திருநாமங்களால் நம் உடலின் இந்த்ரியங்களனைத்துக்கும் ரக்ஷை இடுதல்:

கேசவ, நாராயணகட்டைவிரல், வாய் இவ்விரண்டும் அக்நியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, கட்டை விரலால் வலது இடது கன்னங்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

மாதவ, கோவிந்தபவித்ர விரல் (மோதிர விரல்), கண்கள் இவ்விரண்டும் ஸூர்யனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, பவித்ர விரலால் நமது இரு கண்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

விஷ்ணோ, மதுஸூதநஆள்காட்டி விரல், நாசி இவ்விரண்டும் வாயுவின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, ஆள்காட்டி விரலால் நாசியின் இருபுறங்களிலும் (பெண்கள் மூக்குத்தி போட்டுக் கொள்ளுமிடங்கள்) ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

த்ரிவிக்ரம, வாமநசுண்டுவிரல், காதுகள் இவ்விரண்டும் இந்த்ரனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, சுண்டுவிரலால் வலது இடது காதுகளை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீதரஹ்ருஷீகேசநடுவிரல், தோள்கள் இவ்விரண்டும் ப்ரஜாபதியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, நடுவிரலால் வலது இடது தோள்களை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

பத்மநாப, தாமோதரஉள்ளங்கை, ஹ்ருதயம் மற்றும் உச்சந்தலை இவை இறைவன் உறையுமிடங்கள். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, உள்ளங்கையால் ஹ்ருதயத்தையும் உச்சந்தலையையும் ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸமர்ப்பணம் செய்வதன் காரணம்:

நாம் எதைச் செய்கின்றோமோ, எதைப் புசிக்கின்றோமோ, எதை ஹோமம் செய்கின்றோமோ, எதை தானம் செய்கின்றோமோ, எந்தத் தவம் செய்கின்றோமோஅதை நாராயணனுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம், நாம் நமது புண்ய, பாவ வடிவமான கர்மபந்தங்களினின்று விடுபடுகிறோம். அப்போதுதான் நாம் நமது கர்மபலனுக்கேற்ப சொர்க்கம், நரகம், மறுபிறவிகள் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, நேரடியாக பரமாத்மாவுடன் ஐக்யம் அடைய முடியும். உதாரணத்திற்கு, மஹாபாரதத்தில் குருக்ஷேத்ரப் போரில் கர்ணன் தனது பாவங்களை யுத்தத்தில் ரத்தம் சிந்திக் கழித்தான். அதனால் அர்ஜுனனின் கொடிய அம்புகளால் அவனது உயிர் பிரியாதபடி அவன் செய்த தர்மம் அவனைக் காத்து, அவனை உயிர்வதை செய்தது. அவனுக்கு முக்தியளிப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணன் அந்தணர் வடிவில் வந்து அவனுடைய புண்யபலன்களை தானமாகப் பெற்றுக் கொண்டபின் கர்ணனின் உயிர் பிரிந்து, அவன் பரமாத்மாவுடன் ஐக்யமானான்.

அடுத்த பகுதியில் #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_அர்த்தத்துடன் என்னும் இத்தொடர் நிறைவு பெறுகிறது. அப்பகுதியில் ரக்ஷாஎன்னும் காப்பு மந்த்ரம், அதன் அர்த்தம், செய்முறை இவை குறித்துப் பார்க்கலாம்! 

பாகம்-22

ஸூர்யநாராயணனுக்குச் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமானஸூர்யநாராயண வந்தனம்பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்!

ஸூர்யநாராயண வந்தனம் ||22||

மந்த்ரம்:

நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே ஜகத்ப்ரஸூதி ஸ்திதிநாசஹேதவே |

த்ரயீமயாய த்ரிகுணாத்மதாரிணே விரிஞ்சிநாராயணசங்கராத்மனே ||

த்யேய: ஸதா ஸவித்ருமண்டல-மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந-ஸந்நிவிஷ்ட: |

கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடீ ஹாரீ ஹிரண்மய-வபுர் த்ருத-சங்க-சக்ர: ||

சங்க-சக்ர-கதா-பாணே த்வாரகாநிலயாச்யுத |

கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாகதம் ||

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் |

ஸர்வதேவ நமஸ்கார: ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி ||

ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி ||

அபிவாதயே <-> அஸ்மி போ: || (அபிவாதந நமஸ்கார:)

அர்த்தம்:

ஸூர்ய நாராயண வந்தனம் – (ஜகதேக சக்ஷுஷே) உலகிற்கெல்லாம் ஒரு கண்ணாக விளங்குபவருக்கு, (ஜகத்ப்ரஸூதி ஸ்திதிநாசஹேதவே) உலகின் சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரகாரணருக்கு, (த்ரயீமயாய) வேதஸ்வரூபியும் (த்ரிகுணாத்மதாரிணே விரிஞ்சி நாராயண சங்கராத்மனே) முக்குணத்தால் மூன்று வடிவம் தாங்கி ப்ரஹ்மா, விஷ்ணு, சங்கரன் என்ற மூர்த்திகளில் விளங்குபவருக்கு, (ஸவித்ரே) ஸூர்யதேவனுக்கு (நம:) நமஸ்காரம்.

(ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ) ஸூர்யமண்டல மத்தியில் உறைபவரும், (ஸரஸிஜாஸன-ஸந்நிவிஷ்ட:) பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவரும், (கேயூரவான்மகரகுண்டலவான் கிரீடீ ஹாரீ) தோள்வளையும் காதில் மகர குண்டலமும், சிரசில் கிரீடமும், மார்பில் முத்து மாலையும் அணிந்திருப்பவரும், (த்ருத-சங்க-சக்ர:) சங்கும் சக்கரமும் ஏந்தியவரும், (ஹிரண்மய-வபு:) பொன் போல ஒளிரும் திருமேனி உடையவரும் (நாராயண:) {ஆகிய} நாரயணர் (ஸதா) எப்போதும் (த்யேய:) த்யானிப்பதற்குரியவர்.

(சங்க-சக்ர-கதா-பாணே) சங்கு, சக்கரம், கதை இவற்றை கையில் ஏந்தியவரே! (த்வாரகாநிலய) த்வாரகையில் நித்யவாஸம் செய்பவரே! (அச்யுத) அடியாரை நழுவ விடாதவரே! (கோவிந்த) உலக ரக்ஷகரே! (புண்டரீகாக்ஷ) தாமரை போன்ற கண்களை உடையவரே! (சரணாகதம்) சரணடைந்த (மாம்) என்னை (ரக்ஷ) காத்தருளும்!

(ஆகாசாத்) ஆகாயத்திலிருந்து (பதிதம்) விழுந்த (தோயம்) நீர் (ஸாகரம்) சமுத்ரத்தை (யதா கச்சதி) எவ்வாறு சென்றடைகிறதோ, அவ்வாறே (ஸர்வதேவ நமஸ்கார:) ஸகல தேவர்களுக்கும் செய்யும் நமஸ்காரம் (ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி) ஸ்ரீகேசவனையே நாடி அடைகின்றது. (ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி) “ஓம் நம:” என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீகேசவனையே நாடி அடைகின்றது.

அபிவாதயே ……….அஸ்மி போ:” என்று நமஸ்காரம் செய்யவும்.

செய்முறை:

ஜபம் செய்த திசை நோக்கி நின்று அஞ்சலி செய்து, ஸூர்யமண்டலத்தில் மும்மூர்த்தி வடிவாய் விளங்கும் பரமாத்மாவைப் போற்றி, அபிவாதனத்துடன் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அடுத்த பகுதியில் ஸமர்ப்பணம் செய்கின்ற மந்த்ரம், அர்த்தம் மற்றும் அதன் செய்முறை குறித்துப் பார்க்கலாம்!

பாகம்-21

ஹரிஹர வந்தனம் ||21||

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமானஹரிஹர வந்தனம்பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்!

ருதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்களம் | ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நம: | விச்வரூபாய வை நம ஓம் நம இதி ||

அர்த்தம்:

ஹரிஹர வந்தனம் – (ருதம்) காணும் பொருட்களின் அழகானவனை, (ஸத்யம்) காட்சிக்கு ஆதாரமாக உள்ளவனை, (பரம் ப்ரஹ்ம புருஷம்) பரப்ரஹ்மத்தை உடல்தோறும் உறைபவனை, (க்ருஷ்ண பிங்களம்) கருமேனித் திருமாலும், செம்மேனிச் சிவனும் ஒன்றாயியைந்த வடிவையுடையவனை, (ஊர்த்வரேதம்) வீர்யத்தின் மேல்நோக்கு உடையவனை, (விரூபாக்ஷம்) முக்கண்ணனை, (விச்வரூபாய வை) எல்லாந்தன் வடிவாய்க் கொண்டவனை (நம:) நமஸ்கரிக்கின்றேன்! (விச்வரூபாய வை நம: ஓம் நம: இதி) “ஓம் நம:” என்று, எல்லாந்தன் வடிவாய்க் கொண்டவனுக்குப் பன்முறை நமஸ்காரம்!

செய்முறை:

மேற்கு நோக்கி நின்று அஞ்சலி செய்து, இம்மந்த்ரத்தால் ஹரிஹர வந்தனம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட மந்த்ரத்தில்ம்என்று முடிகின்ற சொற்களைப் பார்க்கின்றோம். அவை ஸம்ஸ்க்ருதத்தின் இலக்கணப்படி, இரண்டாம் வேற்றுமையில் அமைந்துள்ளன.

ஸூர்யநாராயணனுக்குச் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமானஸூர்யநாராயண வந்தனம்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்! 

பாகம்-20

இப்பகுதியில் யமதர்மனுக்கு வணக்கம் சொல்லும்யம வந்தனம்பற்றிப் பார்க்கலாம்:

யம வந்தனம் ||20||

மந்த்ரம்:

யமாய நம: | யமாய தர்மராஜாய ம்ருத்யவேசாந்தகாய ச வைவஸ்வதாய காலாய ஸர்வபூதக்ஷயாய ச ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே | வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: | சித்ரகுப்தாய வை நம ஓம் நம இதி ||

அர்த்தம்:

யம வந்தனம் – (யமாய நம:) யமனுக்கு நமஸ்காரம். (யமாய) யமனுக்கு (தர்மராஜாய) தர்ம ராஜனுக்கு (ம்ருத்யவே ச) ம்ருத்யுவுக்கும், (அந்தகாய ச) முடிப்பவனுக்கும் (வைவஸ்வதாய) விவஸ்வானுடைய புத்ரனுக்கு, (காலாய) காலஸ்வரூபிக்கு, (ஸர்வ பூதக்ஷயாய ச) எல்லாப் பிசாசுகளையும் ஒழிப்பவனுக்கும், (ஔதும்பராய) மிகவும் பலசாலியாயுள்ளவனுக்கு, (தத்னாய) தத்னன் என்ற பெயருடையவனுக்கு, (நீலாய) கரிய மேனி உடையவனுக்கு, (பரமேஷ்டினே) எல்லோராலும் பூஜிக்கப்பட்டவனுக்கு (வ்ருகோதராய) பெருவயிறு படைத்தவனுக்கு, (சித்ராய) விசித்ரமானவனுக்கு, (சித்ரகுப்தாய வை நம:) விசித்ரமாய் தன்னுடைய ரகசியத்தைக் காப்பவனுக்கு நமஸ்காரம். (சித்ரகுப்தாய வை நம ஓம் நம இதி) “ஓம் நம:” என்று, மீண்டும் சித்ரகுப்தனுக்கு நமஸ்காரம்.

செய்முறை:

தெற்கு நோக்கி நின்று அஞ்சலி செய்து, இம்மந்த்ரத்தால் யமதர்ம ராஜனை வணங்க வேண்டும்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும், யமனுடைய ஆலயத்தை நோக்கி நாம் அனைவரும் நாள்தோறும் அடியெடுத்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். முடிவில், நாம் நேசித்த உடலையும் உயிரையும் அவனுக்கு அர்ப்பணம் செய்வோம் என்று எண்ணுவதால் மனதில் வைராக்யமும், ஞான ஒளியும் ஏற்படும்.

இப்பகுதியில் இடம்பெற்றுள்ள மந்த்ரங்களில் "ய", "வே" மற்றும் "னே" என்று சொற்கள் முடிவுறுவதைக் கண்டிருப்பீர்கள். அவை அவ்வாறு முடிவதற்குக் காரணம், ஸம்ஸ்க்ருத விபக்தி இலக்கணப்படி அச்சொற்கள் நான்காம் வேற்றுமையில் அமைந்துள்ளன.

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமானஹரிஹர வந்தனம்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

பாகம்-19

இப்பகுதியில் திசைகளுக்கான தேவதைகளுக்கு வணக்கம் சொல்லும்திக்தேவதா-வந்தனம்பற்றிப் பார்க்கலாம்.

திக்தேவதா-வந்தனம் ||19||

மந்த்ரம்:

ப்ராச்யை திசே நம: | தக்ஷிணாயை திசே நம: | ப்ரதீச்யை திசே நம: | உதீச்யை திசே நம: | ஊர்த்வாய நம: | அதராய நம: | அந்தரிக்ஷாய நம: | பூம்யை நம: | ப்ரஹ்மணே நம: | விஷ்ணவே நம: | ம்ருத்யவே நம: |

அர்த்தம்:

திக்தேவதா வந்தனம் (திக் தேவதைகளின் வந்தனம்):

(ப்ராச்யை திசே நம:) கிழக்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.

(தக்ஷிணாயை திசே நம:) தெற்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.

(ப்ரதீச்யை திசே நம:) மேற்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.

(உதீச்யை திசே நம:) வடக்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம்.

(ஊர்த்வாய நம:) மேல் உள்ள தேவதைகட்கு நமஸ்காரம்.

(அதராய நம:) கீழ் உள்ள தேவதைகட்கு நமஸ்காரம்.

(அந்தரிக்ஷாய நம:) இடையிலுள்ள தேவதைகட்கு நமஸ்காரம்.

(பூம்யை நம:) பூதேவிக்கு நமஸ்காரம்.

(ப்ரஹ்மணே நம:) ப்ரஹ்மாவுக்கு நமஸ்காரம்.

(விஷ்ணவே நம:) விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

(ம்ருத்யவே நம:) ருத்ரனுக்கு நமஸ்காரம்.

செய்முறை:

ஜபம் செய்த திசையிலிருந்து ஆரம்பித்து, வரிசையாக நான்கு திசைகளிலும் மேல் கீழ் திசைகளிலும், இடைவெளியிலும் அஞ்சலி செய்து திக்தேவதைகளையும், பின் பூமியையும் மும்மூர்த்திகளையும் வணங்க வேண்டும்.

அடுத்த பகுதியில் யமதர்மனுக்கு வணக்கம் சொல்லும்யம வந்தனம்பற்றிப் பார்க்கலாம்! 

பாகம்-18 (1)

இப்பகுதியில் முக்கியமான வேதங்கள் அடிப்படையிலான ஸூத்ரங்கள், கோத்ரங்கள், ப்ரவரங்கள் பற்றியும், அவைகுறித்த பட்டியலையும் பார்க்கலாம்:

முக்கியமான ஸூத்ரங்கள்:

ஸூத்ரங்கள், கர்மானுஷ்டான முறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல்களில் முக்கியமானவை பின் வருமாறு:

ரிக்வேதம்ஆச்வலாயன, ஸாங்க்யாயன ஸூத்ரங்கள்.

க்ருஷ்ண யஜுர்வேதம்ஆபஸ்தம்ப, போதாயன, ஸத்யாஷாட, பாரத்வாஜ, வைகானஸ, அக்னிவேச ஸூத்ரங்கள்.

சுக்ல யஜுர்வேதம்காத்யாயன, பாஸ்கர ஸூத்ரங்கள்.

ஸாமவேதம்த்ராஹ்யாயன, கோபில, ஜைமினி ஸூத்ரங்கள்.

வம்சத்தில் கடைசியாய் தோன்றி, ப்ரக்யாதி (பெரும்புகழ்) பெற்ற மஹாபுருஷருடைய பெயரால் கோத்ரம் ஏற்பட்டது. அவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய மகரிஷிகளில் எவர்கள் வம்சத்தின் ப்ரசித்த புருஷர்களோ, அவர்கள் பெயரால் ப்ரவரம் ஏற்பட்டது.

ஒரே கோத்ரத்திலும், ஒரே ப்ரவரத்திலும் விவாஹம் செய்துகொள்வதை தர்ம ஸாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. காரணம், அந்த கோத்ரம்/ப்ரவரத்திலுள்ள ஆண், பெண் ஒருவருக்கொருவர் சகோதர முறை ஆகிறது.

ஒருவனுக்குத் தன்னுடைய கோத்ரம் தெரியாமற் போனால் ஆசாரியனுடைய கோத்ரத்தைக் கொள்ள வேண்டும் (ஆபஸ்தம்பர்). அல்லது, காச்யப கோத்ரம் என்று கொள்ளலாம்.

விச்வாமித்ரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், அத்ரி, வஸிஷ்டர், கச்யபர் என்ற இந்த மன்வந்த்ரத்தின் ஸப்த ரிஷிகளும், அகஸ்த்யர், ப்ருகு, அங்கிரஸ் என்ற மூன்று ரிஷிகளும் ஆகிய இப்பதின்மரே கோத்ர, ப்ரவரங்களுக்கு மூல ரிஷிகள் ஆவர். இவர்களின் ஸந்ததிகளே கோத்ர ப்ரவர்த்தக ரிஷிகள். இதன்படி அமைந்துள்ள முக்கியமான சில அபிவாதன ப்ரவரங்களைப் பற்றி கீழே தந்துள்ளேன்.


வரிசை எண்

கோத்ரம்

ப்ரவரம்

ரிஷிகள் எண்ணிக்கை

1

ஆத்ரேய

ஆத்ரேய-ஆர்ச்சநாநஸ-ச்யாவாச்வ

த்ரயார்ஷேய

2

நைத்ருவ-காச்யப

காச்யப-ஆவத்ஸார-நைத்ருவ

த்ரயார்ஷேய

3

ரேப- காச்யப

காச்யப-ஆவத்ஸார-ரேப

த்ரயார்ஷேய

4

சாண்டில்ய- காச்யப

காச்யப-ஆவத்ஸார-சாண்டில்ய

த்ரயார்ஷேய

5

கார்க்கேய

ஆங்கீரஸ-சைன்ய-கார்க்ய

ஆங்கீரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ-சைன்ய-கார்க்ய

த்ரயார்ஷேய

பஞ்சார்ஷேய

6

கௌண்டின்ய

வாஸிஷ்ட-மைத்ராவருண-கௌண்டின்ய

த்ரயார்ஷேய

7

கௌசிக

வைச்வாமித்ர-ஆகமர்ஷண-கௌசிக

த்ரயார்ஷேய

8

கௌதம

ஆங்கீரஸ-ஆயாஸ்ய-கௌதம

த்ரயார்ஷேய

9

பௌருகுத்ஸ

ஆங்கீரஸ-பௌருகுத்ஸ-த்ராஸதஸ்ய

த்ரயார்ஷேய

10

பாதராயண

ஆங்கீரஸ-பௌருகுத்ஸ-த்ராஸதஸ்ய

த்ரயார்ஷேய

11

பாரத்வாஜ

ஆங்கீரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ

த்ரயார்ஷேய

12

மௌத்கல்ய

ஆத்ரேய-ஆர்ச்சனானஸ-பௌர்வாதித

ஆங்கீரஸ-ஆம்பரீஷ-மௌத்கல்ய

ஆங்கீரஸ-பார்ம்யச்வ-மௌத்கல்ய

த்ரயார்ஷேய

த்ரயார்ஷேய

த்ரயார்ஷேய

13

சாண்டில்ய

காச்யப-தைவல-அஸித

காச்யப-ஆவத்ஸார-நைத்ருவ-ரேப-ரைப-சௌண்டில்ய-சாண்டில்ய

த்ரயார்ஷேய

ஸப்தார்ஷேய

14

வாதூல

பார்க்கவ-வைதஹவ்ய-ஸாவேதஸ

த்ரயார்ஷேய

15

விஷ்ணுவ்ருத்த

ஆங்கீரஸ-பௌருகுத்ஸ-த்ராஸதஸ்ய

த்ரயார்ஷேய

16

சௌனக

கார்த்ஸமத

ஏகார்ஷேய

17

ஸ்ரீவத்ஸ

பார்க்கவ-ச்யாவன-ஆப்னவான-ஔர்வ-ஜாமதக்ன்ய

பஞ்சார்ஷேய

18

ஷடமர்ஷண

ஆங்கீரஸ-த்ராஸதஸ்ய-பௌருகுத்ஸ

த்ரயார்ஷேய

19

ஸங்க்ருதி

சாத்ய-ஸாங்க்ருத்ய-கௌரிவீத

ஆங்கீரஸ-ஸாங்க்ருத்ய-கௌரிவீத

த்ரயார்ஷேய

த்ரயார்ஷேய

20

ஹரித

ஆங்கீரஸ-அம்பரீஷ-யௌவநாச்வ

த்ரயார்ஷேய


மேற்கண்ட பட்டியல்படி, எவருக்கு என்ன கோத்ரம், ப்ரவரம் என்று அவரவர் தந்தை/தாத்தா மூலம் சொல்லப்பட்டுள்ளதோ, அந்த கோத்ரப்ரவரப் பெயர்களைச் சொல்லி அபிவாதன நமஸ்காரம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, எனக்கு மேற்கண்ட பட்டியலில் 11-வது கோத்ரப்ரவரங்கள் என்று எனக்கு என்னுடைய தந்தையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நான் செய்ய வேண்டிய அபிவாதன நமஸ்காரம் பின்வருமாறு:

அபிவாதயே ஆங்கிரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ த்ரய-ஆர்ஷேய ப்ரவரான்வித பாரத்வாஜ கோத்ர:, ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜு: சாகாத்யாயீ ஸ்ரீ ஜெயராம சர்மா நாமாஹம் அஸ்மி போ: ||

நான் க்ருஷ்ண யஜுர்வேதத்திலுள்ள ஆபஸ்தம்ப ஸூத்ரத்தின் தலைமுறைவழி பிறந்தவன் என்பதால், “ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜு: சாகாத்யாயீஎன்று கூறுகிறேன். இப்பதிவைப் படிப்பவர்களில் பலர், சதுர்வேதங்களிலுள்ள வேறு ஏதாவது ஸூத்ரவழி வந்தவர்களாக இருப்பீர்கள். அவர்களுள் ஒருவரை உதாரணம் எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப பின்வரும் அபிவாதன நமஸ்காரம் தந்துள்ளேன்.

அபிவாதயே ஆங்கீரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ-சைன்ய-கார்க்ய பஞ்ச-ஆர்ஷேய ப்ரவரான்வித கார்க்கேய கோத்ர:, ஆச்வலாயன ஸூத்ர: ரிக் சாகாத்யாயீ ஸ்ரீ சாம்பமூர்த்தி சர்மா நாமாஹம் அஸ்மி போ: ||

அடுத்த பகுதியில் திசைகளுக்கான தேவதைகளுக்கு வணக்கம் சொல்லும்திக்தேவதா-வந்தனம்பற்றிப் பார்க்கலாம்!