பாகம்-12
ஸந்த்யாவந்தனம்
(உத்தர பாக:)
ஜபஸங்கல்ப: ||12||
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸந்நவதநம்
த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே ||
(விஷ்ணும்) எங்கும் நிறைந்தவரும்; அன்பர்க்குகந்த வடிவம் எடுப்பவரும்;
(சுக்லாம்பரதரம்)
வெண்ணிற ஆடை உடுத்தவரும்;
(சசிவர்ணம்) சந்திரனைப் போன்ற ஒளியுடையவரும்;
(சதுர்புஜம்) நான்கு கைகளுடையவரும்;
(ப்ரஸன்ன வதநம்)
ஆனந்தம் பொங்கி வழியும் முகமண்டலத்தையுடையவரும்;
ஆகிய (கணபதியை)
(ஸர்வ விக்ந உபசாந்தயே)
எல்லா இடையூறுகளிலிருந்தும் விலக்குவதற்காக
(த்யாயேத்) த்யானம் செய்ய வேண்டும்.
ஓம் பூ: | ஓம் புவ: | ஓகும் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓகும் ஸத்யம் ||
ஓம் தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
ஓமாபோ ஜ்யோதீ ரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவ-ரோம் ||
மந்த்ரத்தின் அர்த்தம்:
ப்ராணாயாமம் (மூச்சின் ஆட்சி):
(ஓம் பூ:) ஓம்காரமே பூலோகம்; (ஓம் புவ: ) ஓம்காரமே புவர்லோகம்; (ஓகும் ஸுவ: ) ஓம்காரமே ஸுவர்லோகம்; (ஓம் மஹ: ) ஓம்காரமே மஹர்லோகம்; (ஓம் ஜந: ) ஓம்காரமே ஜநலோகம்; (ஓம்
தப: ) ஓம்காரமே தபோலோகம்; (ஓகும் ஸத்யம்)
ஓம்காரமே ஸத்யலோகம்
(ஓம்) ஓம்காரப் பொருளான, (ய: ) எந்த பரமாத்மா (ந: ) நம்முடைய (திய: ) புத்தி மற்றும் சக்திகளை (ப்ரசோதயாத்) தூண்டுகிறாரோ, (தத்) அந்த (ஸவிது) அனைத்தையும் படைக்கிறவரான (தேவஸ்ய) பகவானுடைய (வரேண்யம்) சிறந்த (பர்க்க: ) ஜ்யோதிஸ்வரூபத்தை (தீமஹி) த்யானிப்போம். (ஓம்) ஓம்காரமே (ஆப:) ஜலமும் (ஜ்யோதி:) ஒளியும் (ரஜ:) ரஸம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும் (அம்ருதம்) உயிருக்கு ஆதாரமான வாயுவும் (ப்ரஹ்ம) எங்கும் பரந்த ஆகாசமும். (பூர்ப்புவஸ்ஸுவ-ரோம்) பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதிகள் குறிப்பிடும் மனம், புத்தி, அஹங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே!
மமோபாத்த-ஸமஸ்த-துரித-க்ஷய-த்வாரா ஸ்ரீபரமேஸ்வர-ப்ரீத்யர்த்தம் ப்ராத: ஸந்த்யா காயத்ரீ மஹாமந்த்ரஜபம் கரிஷ்யே || (மாத்யாஹ்னிக காயத்ரீ மஹாமந்த்ரஜபம் கரிஷ்யே || ஸாயம் ஸந்த்யா காயத்ரீ மஹாமந்த்ரஜபம் கரிஷ்யே || )
மந்த்ரத்தின் அர்த்தம்:
ஸங்கல்பம் (தெளிந்த தீர்மானம்) : (மம உபாத்த) என்னால் அடையப்பட்ட (ஸமஸ்த-துரித) எல்லாப் பாவங்களையும் (க்ஷயத்வாரா) நசிக்கச் செய்வதின் மூலம் (பரமேஸ்வர-ப்ரீத்யர்த்தம்) பகவானுடைய அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு (ப்ராத: ஸந்த்யா) காலைப் பொழுதிற்கான (காயத்ரீ மஹாமந்த்ரஜபம்) காயத்ரீ மஹாமந்த்ர ஜபத்தை (கரிஷ்யே) செய்ய ஆரம்பிக்கின்றேன்.
(மாத்யாஹ்னிக) உச்சி வேளைக்கான (கரிஷ்யே) செய்கிறேன்.
(ஸாயம்
ஸந்த்யா) அந்திப் பொழுதிற்கான (காயத்ரீ மஹாமந்த்ரஜபம்) காயத்ரீ மஹாமந்த்ர ஜபத்தை (கரிஷ்யே) செய்ய ஆரம்பிக்கின்றேன்.
ஜப ஸங்கல்பம் செய்முறை:
ஸந்த்யாவந்தனம் செய்ய ஆரம்பித்த இடத்திற்கு அருகில் சமமான இடத்தில் பலகையையோ வஸ்த்ரத்தையோ ஆஸனமாகப் போட்டு, அதன்மேல் பத்மாஸனத்தில் அல்லது ஸ்வஸ்திகாஸனத்தில், சுவரிலும் தூணிலும் சாயாமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, பாதி கண்ணை மூடிக் கொண்டு, சுற்றுமுற்றும் பாராமல் ப்ராணாயாமமும் ஜபமும் செய்ய வேண்டும். தீர்த்த பாத்திரத்தை எதிரில் வைத்துக் கொண்டு, காலையில் கிழக்கு நோக்கியும்; நடுப்பகலில் வடக்கு நோக்கியும்; மாலையில் மேற்கு நோக்கியும் மேல் வஸ்த்ரத்தை உபவீதமாகப் போட்டுக் கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.
உடல், தலை, கழுத்து இவற்றை ஒரே ஒழுங்காகவும், அசையாமலும் நிறுத்தி ஸ்திரமாயிருந்து, தன்னுடைய மூக்கு நுனியை உற்று நோக்கி, ஒரு திசையும் பாராமல், அலையாத மனத்தனாய், அச்சம் ஒழிந்தவனாய், ப்ரஹ்மசரிய வ்ரதத்தில் நிலை பெற்றவனாய், மனதை அடக்கி, என்னையே சிந்தித்து, என்னையே பரமாகக் கொண்டு, யுக்தனாக இருக்க வேண்டும் (பகவத்கீதை அத்-6; ஸ்லோ-13-14)
எவ்வாறு காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட விளக்குச் சுடர் அசைவதில்லையோ, அது ஆத்மாவினிடத்தில் யோகத்தைப் பயிற்சி செய்யும் யோகியின் அடங்கிய சித்தத்திற்கு உவமையாக அறிஞர்களால் கருதப் பட்டுள்ளது. (பகவத்கீதை அத்-6; ஸ்லோ-18)
அடுத்த பகுதியில் எவையெவற்றில், யார் எதுவாக இருக்கின்றனர் என்பதைச் சொல்லும் “ப்ரணவஜப-ப்ராணாயாமம்” என்பது பற்றி பார்க்கலாம்.
No comments:
Post a Comment