Sunday, June 13, 2021

பாகம்-18 (1)

இப்பகுதியில் முக்கியமான வேதங்கள் அடிப்படையிலான ஸூத்ரங்கள், கோத்ரங்கள், ப்ரவரங்கள் பற்றியும், அவைகுறித்த பட்டியலையும் பார்க்கலாம்:

முக்கியமான ஸூத்ரங்கள்:

ஸூத்ரங்கள், கர்மானுஷ்டான முறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல்களில் முக்கியமானவை பின் வருமாறு:

ரிக்வேதம்ஆச்வலாயன, ஸாங்க்யாயன ஸூத்ரங்கள்.

க்ருஷ்ண யஜுர்வேதம்ஆபஸ்தம்ப, போதாயன, ஸத்யாஷாட, பாரத்வாஜ, வைகானஸ, அக்னிவேச ஸூத்ரங்கள்.

சுக்ல யஜுர்வேதம்காத்யாயன, பாஸ்கர ஸூத்ரங்கள்.

ஸாமவேதம்த்ராஹ்யாயன, கோபில, ஜைமினி ஸூத்ரங்கள்.

வம்சத்தில் கடைசியாய் தோன்றி, ப்ரக்யாதி (பெரும்புகழ்) பெற்ற மஹாபுருஷருடைய பெயரால் கோத்ரம் ஏற்பட்டது. அவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய மகரிஷிகளில் எவர்கள் வம்சத்தின் ப்ரசித்த புருஷர்களோ, அவர்கள் பெயரால் ப்ரவரம் ஏற்பட்டது.

ஒரே கோத்ரத்திலும், ஒரே ப்ரவரத்திலும் விவாஹம் செய்துகொள்வதை தர்ம ஸாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. காரணம், அந்த கோத்ரம்/ப்ரவரத்திலுள்ள ஆண், பெண் ஒருவருக்கொருவர் சகோதர முறை ஆகிறது.

ஒருவனுக்குத் தன்னுடைய கோத்ரம் தெரியாமற் போனால் ஆசாரியனுடைய கோத்ரத்தைக் கொள்ள வேண்டும் (ஆபஸ்தம்பர்). அல்லது, காச்யப கோத்ரம் என்று கொள்ளலாம்.

விச்வாமித்ரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், அத்ரி, வஸிஷ்டர், கச்யபர் என்ற இந்த மன்வந்த்ரத்தின் ஸப்த ரிஷிகளும், அகஸ்த்யர், ப்ருகு, அங்கிரஸ் என்ற மூன்று ரிஷிகளும் ஆகிய இப்பதின்மரே கோத்ர, ப்ரவரங்களுக்கு மூல ரிஷிகள் ஆவர். இவர்களின் ஸந்ததிகளே கோத்ர ப்ரவர்த்தக ரிஷிகள். இதன்படி அமைந்துள்ள முக்கியமான சில அபிவாதன ப்ரவரங்களைப் பற்றி கீழே தந்துள்ளேன்.


வரிசை எண்

கோத்ரம்

ப்ரவரம்

ரிஷிகள் எண்ணிக்கை

1

ஆத்ரேய

ஆத்ரேய-ஆர்ச்சநாநஸ-ச்யாவாச்வ

த்ரயார்ஷேய

2

நைத்ருவ-காச்யப

காச்யப-ஆவத்ஸார-நைத்ருவ

த்ரயார்ஷேய

3

ரேப- காச்யப

காச்யப-ஆவத்ஸார-ரேப

த்ரயார்ஷேய

4

சாண்டில்ய- காச்யப

காச்யப-ஆவத்ஸார-சாண்டில்ய

த்ரயார்ஷேய

5

கார்க்கேய

ஆங்கீரஸ-சைன்ய-கார்க்ய

ஆங்கீரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ-சைன்ய-கார்க்ய

த்ரயார்ஷேய

பஞ்சார்ஷேய

6

கௌண்டின்ய

வாஸிஷ்ட-மைத்ராவருண-கௌண்டின்ய

த்ரயார்ஷேய

7

கௌசிக

வைச்வாமித்ர-ஆகமர்ஷண-கௌசிக

த்ரயார்ஷேய

8

கௌதம

ஆங்கீரஸ-ஆயாஸ்ய-கௌதம

த்ரயார்ஷேய

9

பௌருகுத்ஸ

ஆங்கீரஸ-பௌருகுத்ஸ-த்ராஸதஸ்ய

த்ரயார்ஷேய

10

பாதராயண

ஆங்கீரஸ-பௌருகுத்ஸ-த்ராஸதஸ்ய

த்ரயார்ஷேய

11

பாரத்வாஜ

ஆங்கீரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ

த்ரயார்ஷேய

12

மௌத்கல்ய

ஆத்ரேய-ஆர்ச்சனானஸ-பௌர்வாதித

ஆங்கீரஸ-ஆம்பரீஷ-மௌத்கல்ய

ஆங்கீரஸ-பார்ம்யச்வ-மௌத்கல்ய

த்ரயார்ஷேய

த்ரயார்ஷேய

த்ரயார்ஷேய

13

சாண்டில்ய

காச்யப-தைவல-அஸித

காச்யப-ஆவத்ஸார-நைத்ருவ-ரேப-ரைப-சௌண்டில்ய-சாண்டில்ய

த்ரயார்ஷேய

ஸப்தார்ஷேய

14

வாதூல

பார்க்கவ-வைதஹவ்ய-ஸாவேதஸ

த்ரயார்ஷேய

15

விஷ்ணுவ்ருத்த

ஆங்கீரஸ-பௌருகுத்ஸ-த்ராஸதஸ்ய

த்ரயார்ஷேய

16

சௌனக

கார்த்ஸமத

ஏகார்ஷேய

17

ஸ்ரீவத்ஸ

பார்க்கவ-ச்யாவன-ஆப்னவான-ஔர்வ-ஜாமதக்ன்ய

பஞ்சார்ஷேய

18

ஷடமர்ஷண

ஆங்கீரஸ-த்ராஸதஸ்ய-பௌருகுத்ஸ

த்ரயார்ஷேய

19

ஸங்க்ருதி

சாத்ய-ஸாங்க்ருத்ய-கௌரிவீத

ஆங்கீரஸ-ஸாங்க்ருத்ய-கௌரிவீத

த்ரயார்ஷேய

த்ரயார்ஷேய

20

ஹரித

ஆங்கீரஸ-அம்பரீஷ-யௌவநாச்வ

த்ரயார்ஷேய


மேற்கண்ட பட்டியல்படி, எவருக்கு என்ன கோத்ரம், ப்ரவரம் என்று அவரவர் தந்தை/தாத்தா மூலம் சொல்லப்பட்டுள்ளதோ, அந்த கோத்ரப்ரவரப் பெயர்களைச் சொல்லி அபிவாதன நமஸ்காரம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, எனக்கு மேற்கண்ட பட்டியலில் 11-வது கோத்ரப்ரவரங்கள் என்று எனக்கு என்னுடைய தந்தையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நான் செய்ய வேண்டிய அபிவாதன நமஸ்காரம் பின்வருமாறு:

அபிவாதயே ஆங்கிரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ த்ரய-ஆர்ஷேய ப்ரவரான்வித பாரத்வாஜ கோத்ர:, ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜு: சாகாத்யாயீ ஸ்ரீ ஜெயராம சர்மா நாமாஹம் அஸ்மி போ: ||

நான் க்ருஷ்ண யஜுர்வேதத்திலுள்ள ஆபஸ்தம்ப ஸூத்ரத்தின் தலைமுறைவழி பிறந்தவன் என்பதால், “ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜு: சாகாத்யாயீஎன்று கூறுகிறேன். இப்பதிவைப் படிப்பவர்களில் பலர், சதுர்வேதங்களிலுள்ள வேறு ஏதாவது ஸூத்ரவழி வந்தவர்களாக இருப்பீர்கள். அவர்களுள் ஒருவரை உதாரணம் எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப பின்வரும் அபிவாதன நமஸ்காரம் தந்துள்ளேன்.

அபிவாதயே ஆங்கீரஸ-பார்ஹஸ்பத்ய-பாரத்வாஜ-சைன்ய-கார்க்ய பஞ்ச-ஆர்ஷேய ப்ரவரான்வித கார்க்கேய கோத்ர:, ஆச்வலாயன ஸூத்ர: ரிக் சாகாத்யாயீ ஸ்ரீ சாம்பமூர்த்தி சர்மா நாமாஹம் அஸ்மி போ: ||

அடுத்த பகுதியில் திசைகளுக்கான தேவதைகளுக்கு வணக்கம் சொல்லும்திக்தேவதா-வந்தனம்பற்றிப் பார்க்கலாம்!

No comments:

Post a Comment