பாகம்-22
ஸூர்யநாராயணனுக்குச் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமான “ஸூர்யநாராயண வந்தனம்” பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்!
ஸூர்யநாராயண வந்தனம் ||22||
மந்த்ரம்:
நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே ஜகத்ப்ரஸூதி ஸ்திதிநாசஹேதவே |
த்ரயீமயாய த்ரிகுணாத்மதாரிணே
விரிஞ்சிநாராயணசங்கராத்மனே
||
த்யேய: ஸதா ஸவித்ருமண்டல-மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந-ஸந்நிவிஷ்ட: |
கேயூரவான் மகரகுண்டலவான்
கிரீடீ ஹாரீ ஹிரண்மய-வபுர் த்ருத-சங்க-சக்ர:
||
சங்க-சக்ர-கதா-பாணே த்வாரகாநிலயாச்யுத |
கோவிந்த புண்டரீகாக்ஷ
ரக்ஷ மாம் சரணாகதம்
||
ஆகாசாத் பதிதம்
தோயம் யதா கச்சதி ஸாகரம்
|
ஸர்வதேவ நமஸ்கார: ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி ||
ஸ்ரீகேசவம்
ப்ரதி கச்சதி ஓம் நம இதி
||
அபிவாதயே <-> அஸ்மி போ: || (அபிவாதந நமஸ்கார:)
அர்த்தம்:
ஸூர்ய நாராயண வந்தனம் – (ஜகதேக சக்ஷுஷே) உலகிற்கெல்லாம் ஒரு கண்ணாக விளங்குபவருக்கு, (ஜகத்ப்ரஸூதி ஸ்திதிநாசஹேதவே) உலகின் சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரகாரணருக்கு, (த்ரயீமயாய) வேதஸ்வரூபியும் (த்ரிகுணாத்மதாரிணே விரிஞ்சி நாராயண சங்கராத்மனே) முக்குணத்தால் மூன்று வடிவம் தாங்கி ப்ரஹ்மா, விஷ்ணு, சங்கரன் என்ற மூர்த்திகளில் விளங்குபவருக்கு, (ஸவித்ரே) ஸூர்யதேவனுக்கு (நம:) நமஸ்காரம்.
(ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ) ஸூர்யமண்டல மத்தியில் உறைபவரும், (ஸரஸிஜாஸன-ஸந்நிவிஷ்ட:) பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவரும், (கேயூரவான் – மகரகுண்டலவான் கிரீடீ ஹாரீ) தோள்வளையும் காதில் மகர குண்டலமும், சிரசில் கிரீடமும், மார்பில் முத்து மாலையும் அணிந்திருப்பவரும், (த்ருத-சங்க-சக்ர:) சங்கும் சக்கரமும் ஏந்தியவரும், (ஹிரண்மய-வபு:) பொன் போல ஒளிரும் திருமேனி உடையவரும் (நாராயண:) {ஆகிய} நாரயணர் (ஸதா) எப்போதும் (த்யேய:) த்யானிப்பதற்குரியவர்.
(சங்க-சக்ர-கதா-பாணே) சங்கு, சக்கரம், கதை இவற்றை கையில் ஏந்தியவரே! (த்வாரகாநிலய) த்வாரகையில் நித்யவாஸம் செய்பவரே! (அச்யுத) அடியாரை நழுவ விடாதவரே! (கோவிந்த) உலக ரக்ஷகரே! (புண்டரீகாக்ஷ) தாமரை போன்ற கண்களை உடையவரே! (சரணாகதம்) சரணடைந்த (மாம்) என்னை (ரக்ஷ) காத்தருளும்!
(ஆகாசாத்) ஆகாயத்திலிருந்து (பதிதம்) விழுந்த (தோயம்) நீர் (ஸாகரம்) சமுத்ரத்தை (யதா கச்சதி) எவ்வாறு சென்றடைகிறதோ, அவ்வாறே (ஸர்வதேவ நமஸ்கார:) ஸகல தேவர்களுக்கும் செய்யும் நமஸ்காரம் (ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி) ஸ்ரீகேசவனையே நாடி அடைகின்றது. (ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி) “ஓம் நம:” என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீகேசவனையே நாடி அடைகின்றது.
“அபிவாதயே ……….அஸ்மி போ:” என்று நமஸ்காரம் செய்யவும்.
செய்முறை:
ஜபம் செய்த திசை நோக்கி நின்று அஞ்சலி செய்து, ஸூர்யமண்டலத்தில் மும்மூர்த்தி வடிவாய் விளங்கும் பரமாத்மாவைப் போற்றி, அபிவாதனத்துடன் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
அடுத்த பகுதியில் ஸமர்ப்பணம் செய்கின்ற மந்த்ரம், அர்த்தம் மற்றும் அதன் செய்முறை குறித்துப் பார்க்கலாம்!
No comments:
Post a Comment