Sunday, June 13, 2021

பாகம்-6

இப்பகுதியில் நாம் பார்க்க இருப்பது, “ப்ராசனம்என்னும் மந்த்ரத்தால் ஜபிக்கப்பட்ட தீர்த்தத்தை உட்கொள்ளுதல்:

ப்ராசனம் ||6||

ப்ராத: (காலை வேளையில்):

ஸூர்யச்ச மா மன்யுச்ச மன்யுபதயச்ச மன்யு-க்ருதேப்ய: | பாபேப்யோ ரக்ஷந்தாம் | யத்-ராத்ர்யா பாப-மகார்ஷம் | மனஸா வாசா ஹஸ்தாப்யாம் | பத்ப்யா-முதரேண சிச்நா | ராத்ரிஸ்-ததவலும்பது | யத்கிஞ்ச துரிதம் மயி | இதமஹம் மாமம்ருத-யோநௌ | ஸூர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ||

அர்த்தம்:

ப்ராசனம் (மந்த்ரத்தால் ஜபிக்கப்பட்ட தீர்த்தத்தை உட்கொள்ளுதல்)

காலையில்: (ஸூர்யச்ச) அனைத்தையும் இயக்குவிக்கும் ஸூர்யனும் (மன்யுச்ச) அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் (மன்யு-பதயச்ச) கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் (மன்யு-க்ருதேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட (பாபேப்ய:) பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்) காப்பாற்றட்டும். (ராத்ர்யா) இரவில் (மனஸா) மனத்தாலும் (வாசா) வாக்காலும் (ஹஸ்தாப்யாம்) கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும் (உதரேண) வயிற்றாலும் (சிச்நா) ஆண்குறியாலும் (யத்) எந்த (பாபம்) பாவத்தை (அகார்ஷம்) செய்தேனோ, (கிஞ்ச) இன்னும் (மயி) என்னிடத்தில் (யத்) எந்த (துரிதம்) பாவம் உண்டோ, (தத்) அதையும்; (ராத்ரி:) இராத்ரியின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக் காரணமாகிய (ஸூர்யே ஜ்யோதிஷி) ஸூர்ய வடிவான பரஞ்ஜோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன். (ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

மத்யாஹ்னே (நடுப்பகலில்): ஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புனாது மாம் | புனந்து ப்ரஹ்மணஸ்பதிர்-ப்ரஹ்ம பூதா புனாது மாம் | யதுச்சிஷ்ட-மபோஜ்யம் யத்வாதுச்-சரிதம் மம | ஸர்வம் புனந்து மாமாபோஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா ||

அர்த்தம்:

மத்யாஹ்னே (நடுப்பகலில்): (ஆப:) ஜலதேவதை (ப்ருதிவீம்) தனக்குறைவிடமாகிய பூமியை (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) அங்ஙனம் புனிதமாக்கப்பட்ட (ப்ருதிவீ) பூமி, (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (ப்ரஹ்மணஸ்பதி:) அது வேதத்திற்குறைவிடமாகிய ஆசாரியனையும் (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) என்றும் புனிதமாயுள்ள (ப்ரஹ்ம) வேதம் (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (உச்சிஷ்டம்) பிறர் உண்ட மிச்சமும் (அபோஜ்யம்) புசிக்கத் தகாததுமான (யத்) எது (மயா) என்னால் (புக்தம்) புசிக்கப்பட்டதோ, (வா) அல்லது (மம) என்னுடைய (யத்) எந்த (துச்சரிதம்) துர்நடத்தை உண்டோ, (கிஞ்ச) மேலும்; (அஸதாம்) கெட்டவர்களிடமிருந்து (ப்ரதிக்ரஹம்) ஏற்றுக் கொண்டது எது உண்டோ, (ஸர்வம்) அவை எல்லாவற்றினின்றும் (மாம்) என்னை (புனந்து) ஜலதேவதை புனிதமாக்கட்டும்என்று ப்ரார்த்தித்து (ஸ்வாஹா) புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்.

ஸாயங்காலே (மாலை வேளையில்): அக்நிச்ச மா மன்யுச்ச மன்யுபதயச்ச மன்யு-க்ருதேப்ய: | பாபேப்யோ ரக்ஷந்தாம் | யதஹ்னா பாப-மகார்ஷம் | மனஸா வாசா ஹஸ்தாப்யாம் | பத்ப்யா-முதரேண சிச்நா | அஹஸ்ததவலும்பது | யத் கிஞ்ச துரிதம் மயி | இதமஹம் மாமம்ருத-யோநௌ | ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ||

அர்த்தம்:

ஸாயங்காலே (மாலை வேளையில்): (அக்நிச்ச) அக்னியும் (மன்யுச்ச) அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும், (மன்யு-க்ருதேப்ய: பாபேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்) காப்பாற்றட்டும். (அஹ்நா) பகலில் (மனஸா) மனத்தாலும் (வாசா) வாக்காலும் (ஹஸ்தாப்யாம்) கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும் (உதரேண) வயிற்றாலும் (சிச்நா) ஆண்குறியாலும் (யத்) எந்த (பாபம்) பாவத்தை (அகார்ஷம்) செய்தேனோ, (கிஞ்ச) இன்னும் (மயி) என்னிடத்தில் (யத்) எந்த (துரிதம்) பாவம் உண்டோ, (தத்) அதையும் (அஹ:) பகலின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக் காரணமாகிய (ஸத்யே ஜ்யோதிஷி) முக்காலத்திலும் ஸத்யமாய் விளங்கும் பரஞ்சோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன். (ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

ப்ரயோகம் (செய்முறை): உள்ளங்கையில் உளுந்து மூழ்கும் அளவு தீர்த்தத்தை ஏந்தி, மந்த்ரத்தை ஜபித்துப் பின் அதை உட்கொள்க.

முதல் நாள் இரவிலிருந்து அன்றைய நாள் மாலை வரை நாம் எவ்வித பாவச் செயல்களிலும் ஈடுபடாமல் நம்முடைய மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க  ஒரு நாளின் மூன்று வேளைகளிலும் அந்தந்த வேளைக்குரிய, மேற்கண்ட மந்த்ரங்களை ஜபிக்கிறோம். இவற்றை தினந்தோறும் ஜபிக்கின்ற காரணத்தால் எவையெல்லாம் பாவச் செயல்கள் என்பதைப் பகுத்தறியும் அறிவும் நமக்குக் கிட்டும்; நமக்கு பாவம் செய்யும் எண்ணமும் தோன்றாது. இதனால் நம்முள்ளிருக்கும் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள தொலைவு வெகுவாகக் குறையும். அதனால் நாம் பரமாத்மாவை விரைவில் அடையும் பாக்யமும் கிட்டும்.

அடுத்த பகுதியில்மீண்டும் ஒருமுறை ஜலதேவதைகளிடம் வைக்கும் கோரிக்கைஎன்னும்புநர்மார்ஜநம்என்ற மந்த்ர ப்ரயோகத்தைப் பற்றிப் பார்க்கலாம். 

No comments:

Post a Comment