பாகம்-17 (1)
இப்பகுதியில் த்ரிகால ஸூர்ய உபஸ்தான மந்த்ரங்களில் முதல் பகுதியாக, காலை வேளையில் சொல்லும் உபஸ்தான மந்த்ரம் பற்றி பார்க்கலாம்.
ஸூர்ய உபஸ்தானம் ||17.1||
ப்ராத: காலே –
மித்ரஸ்ய சர்ஷணீ
த்ருத:
ச்ரவோ தேவஸ்ய ஸாநஸிம் | ஸத்யம் சித்ர ச்ரவஸ்தமம்
||
மித்ரோ ஜனான்
யாதயதி ப்ரஜாநன் மித்ரோ தாதார ப்ருதிவீமுதத்யாம் |
மித்ர: க்ருஷ்டீரநிமிஷாபிசஷ்டே ஸத்யாய ஹவ்யம் க்ருதவத்விதேம ||
ப்ரஸ மித்ர
மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த ஆதித்ய சிக்ஷதி வ்ரதேன |
ந ஹந்யதே ந
ஜீயதே த்வோதோ நைநமகும்ஹோ அச்னோத்யந்திதோ ந தூராத் ||
அர்த்தம்:
ப்ராத: (காலையில்) - (சர்ஷணீ த்ருத:) ப்ரஜைகளை இரக்ஷிக்கும் (மித்ரஸ்ய தேவஸ்ய) ஸூர்யதேவனுடைய (ஸாநஸிம்) பஜிக்கத் தகுந்ததும் (ஸத்யம்) அழிவற்றதும் (சித்ரச்ரவஸ்யதமம்) கேட்பவர் மனதைக் கவர்வதில் சிறந்ததுமான (ச்ரவ:) கீர்த்தியையும் பெருமையையும் த்யானிக்கிறேன்.
(மித்ர:) ஸூர்யன் (ப்ரஜாநன்) அனைத்தையும் அறிந்து கொண்டு (ஜநான்) மக்களை (யாதயதி) நடத்தி வைக்கிறார். (மித்ர:) ஸூர்யன் (ப்ருதிவீம்) பூமியையும் (உத) மேலும் (த்யாம்) வானுலகையும் (தாதார) தாங்குகிறார். (மித்ர:) ஸூர்யன் (க்ருஷ்டீ:) ஜீவராசிகளை (அநிமிஷா) கண்கொட்டாமல் (அபிசஷ்டே) பார்த்துக் கொண்டிருக்கிறார். (ஸத்யாய) அழியாத பலனைப் பெறுவதற்காக (க்ருதவத்ஹவ்யம்) நெய் நிறைந்த ஹவிஸ்ஸை (விதேம) அளிக்கிறோம்.
(மித்ர ஆதித்ய) மித்திரரான ஸூர்யபகவானே! (ய:) எவன் (வ்ரதேன) நியமத்துடன் (தே) உம்மை (சிக்ஷதி) ஆராதிக்க விரும்புகிறானோ, (ஸ: மர்த்ய:) அந்த மனிதன் (ப்ர ப்ரயஸ்வான்) பரிபூர்ணமான தர்மபலனுடன் கூடினவனாக (அஸ்து) ஆகட்டும். (த்வா உத:) உம்மால் இரக்ஷிக்கப் பட்டவன் (ந ஹந்யதே) நோய்வாய்ப்பட்டு அழிவுறான்; (ஏனம்) இவனை (அம்ஹ:) பாவம் (அந்தித:) ஸமீபத்திலோ, (தூராத்) தொலைவிலோ (ந அச்நோதி) துன்புறுத்தாது.
செய்முறை:
ஜபம் செய்த
கிழக்கு திசை நோக்கி,
கைகூப்பி நின்றுகொண்டு, உதிக்கும் ஸூர்யமண்டல மத்தியில்
விளங்கும் பரமாத்மாவை இந்த மந்த்ரத்தால் துதித்து வணங்க வேண்டும். அதற்கு முன், கீழ்க்காணும் மந்த்ரத்தைக் கூற வேண்டும்:
மித்ரஸ்ய இதி மந்த்ரஸ்ய விச்வேதேவா ருஷய: |
காயத்ரீ த்ரிஷ்டுபௌ
ச்சந்தாம்ஸி
|
மித்ரோ தேவதா | ஸூர்யோபஸ்தானே விநியோக: ||
(பொருள்): இந்த ஸூர்ய உபஸ்தான மந்த்ரத்தில் விச்வ தேவர் ரிஷி; காயத்ரீ த்ருஷ்டுப் சந்தஸ்; ஸூர்யன் தேவதை. இந்த ரிஷி-சந்தஸ்-தேவதை மூலம் ஸூர்ய உபஸ்தான மந்த்ரத்தை நான் ஜபிக்கிறேன்.
இம்மந்த்ரத்தின் பொருளை ஆழ்ந்து கவனித்தால், இம்மந்த்ரம் நாம் தற்போது எந்த நிலையிலிருக்கிறோமோ, அந்த நிலையிலிருந்து பல படிகள் நம்மை நாம் உயர்த்திக் கொள்ளும் வகையில் நம்மை நாம் செலுத்திக் கொள்ள பேருதவி புரிகிறது என்பதை நாம் உணர இயலும். அவ்வாறு உணர்வதற்காக, மீண்டுமொருமுறை இம்மந்த்ரத்தின் பொருளை கீழே தந்துள்ளேன்:
ஸூர்யன் அனைத்தையும் அறிந்து கொண்டு மக்களை நடத்தி வைக்கிறார். ஸூர்யன் பூமியையும் மேலும் வானுலகையும் தாங்குகிறார். ஸூர்யன் ஜீவராசிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அழியாத பலனைப் பெறுவதற்காக நெய் நிறைந்த ஹவிஸ்ஸை அளிக்கிறோம்.
மித்திரரான ஸூர்யபகவானே! எவன் நியமத்துடன் உம்மை ஆராதிக்க விரும்புகிறானோ, அந்த மனிதன் பரிபூர்ணமான தர்மபலனுடன் கூடினவனாக ஆகட்டும். உம்மால் இரக்ஷிக்கப் பட்டவன் நோய்வாய்ப்பட்டு அழிவுறான்; இவனை பாவம் ஸமீபத்திலோ, தொலைவிலோ துன்புறுத்தாது.
இம்மந்த்ரம் மூலம் ஸூர்யபகவானை தினமும் மூன்று வேளைகளிலும் ஆராதிப்பவனுக்கு உடலாலும் மனத்தாலும் நல்லதை மட்டுமே செய்யக் கூடிய வாய்ப்பையளிப்பதையும், இந்த ஆராதனையால் அவனுடைய உடலும் மனமும் பரிபூர்ண நலத்துடன் விளங்க வாய்ப்புள்ளதையும் அறிய முடியும். மனிதகுலம் நலத்துடனும், வளத்துடனும், நல்லவர்களாகவும் விளங்க வேண்டுமென்பதற்காக இம்மந்த்ரத்தை உருவாக்கிய அந்த ஆத்மா(க்களுக்கு)வுக்கு என்னுடைய ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்!
அடுத்த பகுதியில் நடுப்பகல் வேளையில் சொல்ல வேண்டிய ஸூர்ய உபஸ்தான மந்த்ரம் குறித்துப் பார்க்கலாம்!
No comments:
Post a Comment