Sunday, June 13, 2021

பாகம்-14

இப்பகுதியில் மந்த்ரம் மூலம் நமது ஹ்ருதயத்தில் காயத்ரீ தேவியை அமரச் செய்யும்காயத்ரீ ஆவாஹநம்பற்றிப் பார்க்கலாம்.

காயத்ரீ ஆவாஹநம் ||14||

ஆயாத்வித்யநுவாகஸ்ய வாமதேவ ருஷி: | அநுஷ்டுப் சந்த: | காயத்ரீ தேவதா ||

ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மசம்மிதம் | காயத்ரீம் ச்சந்தஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந: ||

ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு ரபிபூரோம் காயத்ரீமாவாஹயாமி ஸாவித்ரீமாவாஹயாமி ஸரஸ்வதீமாவாஹயாமி ||

மந்த்ரத்தின் அர்த்தம்:

காயத்ரீ ஆவாஹநம் (காயத்ரீ தேவியை எழுந்தருள ப்ரார்த்தித்தல்):

(ஆயாத்வித்யநுவாகஸ்ய) ஆயாது என்னும் அநுவாகத்திற்கு (வாமதேவ ருஷி:) வாமதேவர் ரிஷி; (அநுஷ்டுப் ச்சந்த:) அநுஷ்டுப் சந்தம்; (காயத்ரீ தேவதா) காயத்ரி தேவதை; (வரதா) விரும்பிய வரங்களை அளிப்பவளும், (அக்ஷரம்) அழிவற்றவளும், (ப்ரஹ்ம ஸம்மிதம்) வேதத்தால் அறியப்பட்டவளும், (சந்தஸாம் மாதா) வேதமாதாவாகவும் ஆகிய (காயத்ரீம் தேவீ) காயத்ரி தேவி (ஆயாது) எழுந்தருள வேண்டும். (:) (இதம் ப்ரஹ்ம) இந்த வேத மந்த்ரஸ்துதியை (ஜுஷஸ்வ) அங்கீகரித்தருள வேண்டும்.

(ஓஜ: அஸி) காயத்ரியே! நீயே ப்ராண சக்தியாகவும், இந்த்ரிய சக்தியாகவும் இருக்கிறாய்; (ஸஹ: அஸி) சத்ருக்களை வெல்லுந்திறமையாக இருக்கிறாய்; (பலம் அஸி) அங்கங்களின் வலிமையாக இருக்கிறாய்; (ப்ராஜ: அஸி) ஞான ஒளியாக இருக்கிறாய்; (தேவானாம்) தேவர்களுடைய (நாம) ப்ரசித்தமான (நாமாஸி) ப்ரகாச வடிவாயிருக்கின்றாய்; (விச்வம் அஸி) உலக வடிவாயிருக்கின்றாய்; (விச்வாயு:) காலரூபியாக, உலகின் ஆயுளாகவும் இருக்கின்றாய்; (ஸர்வம் அஸி) எல்லாமாக இருக்கின்றாய்; (ஸர்வாயு:) எல்லோருடைய ஆயுளாகவுமிருக்கின்றாய்; (அபி பூ:) அனைத்தையும் வென்றவளாயுமிருக்கின்றாய்! (ஓம்) ப்ரணவப் பொருளான (காயத்ரீம்) காயத்ரி தேவியே! உன்னை (ஆவாஹயாமி) எழுந்தருள ப்ரார்த்திக்கின்றேன். (ஸாவித்ரீம் ஆவாஹயாமி) ஸாவித்ரியே! உன்னை எழுந்தருள ப்ரார்த்திக்கின்றேன். (ஸரஸ்வதீம் ஆவாஹயாமி) ஸரஸ்வதியே! உன்னை எழுந்தருள ப்ரார்த்திக்கின்றேன்.

காயத்ரீ ந்யாஸ: ||14.2||

ஸாவித்ர்யா ருஷிர்விச்வாமித்ர: | நிச்ருத் காயத்ரீ ச்சந்த: | ஸவிதா தேவதா ||

மந்த்ரத்தின் அர்த்தம்:

காயத்ரீ ந்யாஸம்: (ஸாவித்ர்யா) ஸாவித்ரீ மந்த்ரத்திற்கு (ருஷி: விச்வாமித்ர:) விச்வாமித்ரர் ரிஷி, (நிச்ருத் காயத்ரீ ச்சந்த:) நிச்ருத் காயத்ரீ என்னும் சந்தம், (ஸவிதா தேவதா) ஸவிதா தேவதை.

செய்முறை:

இந்த மந்த்ரத்தால் ஹ்ருதய கமலத்தில் ஆவிர்ப்பவித்து, அருள்புரியும்படி காயத்ரீ தேவியை ப்ரார்த்தித்து, ஆவாஹநீ முத்திரையை முடிவில் மும்முறை ஹ்ருதயத்தை நோக்கிக் காட்ட வேண்டும். ஆவாஹநீ முத்திரை என்பது, கட்டை விரல்களால் பவித்ர விரல்களின் அடிக்கணுவைத் தொட்டிருத்தல். மேற்கண்ட மந்த்ரத்தில் ஆவாஹயாமி என்று முடியும் ஒவ்வொரு முறையும் மேற்கண்ட முத்திரையை (அதாவது, இரு கரங்களின் உள்ளங்கைகள் ஹ்ருதயத்தை நோக்கியிருக்கும்படி வைத்து, கட்டை விரல்களால் பவித்ர விரல்களின் அடிக்கணுவைத் தொட்டுக் கொண்டு) ஹ்ருதயத்தின் பக்கமாக உள்புறமாக மடித்து விட வேண்டும்.

அதன்பின், ஸாங்கோபாங்கமாக ஜபம் செய்வதற்கு ரிஷி, ச்சந்தஸ் மற்றும் தேவதையுடன் கரந்யாஸம், அங்கந்யாஸம், ஸ்வரூபத்யானம் மற்றும் பஞ்சபூஜை முதலியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதற்குக் காரணம், நாம் செய்கின்ற ஸந்த்யாவந்தனத்தின் நடுவில் நாம் நமது ஹ்ருதயத்தில் ஆவாஹநம் செய்து வழிபடுகின்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகள் அகன்று சென்று விடாமலிருக்க அவர்களைப் பத்து திசைகளில் எத்திசை வழியாகவும் வெளியேறாமலிருக்க திக்பந்தநம் செய்ய வேண்டும்.

தத்ஸவிதுர்வரேண்யம் இதி பீஜம் | பர்க்கோ தேவஸ்ய தீமஹி இதி சக்தி: | தியோ யோ ந: ப்ரசோதயாத் இதி கீலகம் | மம ஸ்ரீ காயத்ரீ ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஜபே விநியோக: ||

கரந்யாஸம்: - தத்ஸவிது: அங்குஷ்டப்யாம் நம: | வரேண்யம் தர்ஜநீப்யாம் நம: | பர்க்கோ தேவஸ்ய மத்த்யமாப்யாம் நம: | தீமஹி அநாமிகாப்யாம் நம: | தியோ யோ ந: கநிஷ்டிகாப்யாம் நம: | ப்ரசோதயாத் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம: |

அங்கந்யாஸம்: - தத்ஸவிது: ஹ்ருதயாய நம: | வரேண்யம் சிரஸே ஸ்வாஹா | பர்க்கோ தேவஸ்ய சிகாயை வஷட் | தீமஹி கவசாய ஹும் | தியோ யோ ந: நேத்ரத்ரயாய வௌஷட் | ப்ரசோதயாத் அஸ்த்ராய பட் || பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த: ||

(இந்த மந்த்ரம் வரை சொல்லிவிட்டு, காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். காயத்ரி ஜப மந்த்ரம், செய்முறை இவற்றை பாகம்-15-ல் பார்க்கவுள்ளோம்.)

த்யானம்: - முக்தாவித்ரும ஹேமநீலதவளச்சாயைர்முகைஸ்த்ரீக்ஷணைர்யுக்தாமிந்துகலாநிபத்தமகுடாம் தத்வார்த்தவர்ணாத்மிகாம் | காயத்ரீம் வரதாபயாங்குசகசா: சுப்ரம்கபாலம் குணம் சங்கம் சக்ர மதாரவிந்தயுகளம் ஹஸ்தைர்வஹந்தீம் பஜே ||

அக்ஷ:ஸ்ரக் குண்டிகாஹஸ்தாம் சுத்த ஸ்படிக நிர்மலாம் | ஸர்வவித்யாமயீம் வந்தே காயத்ரீம் வேதமாதரம் ||

யோ தேவ: ஸவிதாஸ்மாகம் தியோ தர்மாதிகோசரா: | ப்ரேரயேத் தஸ்யயத்பர்க்கஸ் தத்வரேண்ய முபாஸ்மஹே ||

பஞ்சபூஜா: - லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி | ஹம் ஆகாசாத்மநே புஷ்பை: பூஜயாமி | யம் மனே தீபம் தர்சயாமி | வம் அம்ருதாத்மனே அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி | ஸம் ஸர்வாத்மநே ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி ||

இதற்கு அடுத்த பகுதியில் காயத்ரி ஜபம் செய்வது பற்றிப் பார்க்கவுள்ளோம். அந்த காயத்ரி ஜபம் முடிந்தவுடன், ப்ராணாயாமத்துடன் அங்கந்யாஸம் மட்டும் செய்து (அங்கந்யாஸ மந்த்ரத்தில்ப்ரசோதயாத் அஸ்த்ராய பட்வரை உச்சரித்து விட்டு) “பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்விமோக:” என்று சொல்லி, த்யான மந்த்ரத்தால் துதித்து, பஞ்ச பூஜை செய்யவும். அதற்குப்பின் உபஸ்தானம்.

 

No comments:

Post a Comment