Sunday, June 13, 2021

பாகம்-23

இப்பகுதியில் ஸமர்ப்பணம் செய்கின்ற மந்த்ரம், அர்த்தம் மற்றும் அதன் செய்முறை குறித்துப் பார்க்கலாம்!

ஸமர்ப்பணம் ||23||

காயேன வாசா மனஸேந்த்ரியைர்-வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

(ஆசமநம்) ||

அர்த்தம்:

ஸமர்ப்பணம் – (காயேன) சரீரத்தாலோ (வாசா) வாக்கினாலோ (மனஸா) மனதாலோ (இந்த்ரியைர் வா) கர்மேந்த்ரியங்களாலோ (புத்த்யாத்மனா வா) ஞானேந்த்ரியங்களாலோ (ப்ரக்ருதே: ஸ்வபாவாத்) இயற்கையின் இயக்கத்தாலோ (யத் யத்) எது எதை (கரோமி) செய்கிறேனோ (ஸகலம்) அது எல்லாவற்றையும் (பரஸ்மை நாராயணா இதி) பரம புருஷனாகிய நாராயணனுக்கே என்று (ஸமர்ப்பயாமி) ஸமர்ப்பிக்கின்றேன்.

செய்முறை:

வலது உள்ளங்கையில் சிறிது தீர்த்தத்தை ஏந்திக் கொண்டு, ஸந்த்யோபாஸனையின் பலனை பரமாத்மா ஸ்ரீமந் நாராயணனுக்கு ஸமர்ப்பணம் செய்வதாய் சிந்தித்து, பின்னர் நுனிவிரல்களின் வழியாகத் தீர்த்தத்தை பூமியில் விட்டுவிட்டு ஆசமநம் செய்ய வேண்டும்.

ஸமர்ப்பணம் முடிந்தபின்பு ஆசமநம் செய்ய வேண்டும்.

ஆசமந மந்த்ரம்:

அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)

அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)

கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)

இனி, விஷ்ணுவின் பன்னிரு திருநாமங்களால் நம் உடலின் இந்த்ரியங்களனைத்துக்கும் ரக்ஷை இடுதல்:

கேசவ, நாராயணகட்டைவிரல், வாய் இவ்விரண்டும் அக்நியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, கட்டை விரலால் வலது இடது கன்னங்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

மாதவ, கோவிந்தபவித்ர விரல் (மோதிர விரல்), கண்கள் இவ்விரண்டும் ஸூர்யனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, பவித்ர விரலால் நமது இரு கண்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

விஷ்ணோ, மதுஸூதநஆள்காட்டி விரல், நாசி இவ்விரண்டும் வாயுவின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, ஆள்காட்டி விரலால் நாசியின் இருபுறங்களிலும் (பெண்கள் மூக்குத்தி போட்டுக் கொள்ளுமிடங்கள்) ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

த்ரிவிக்ரம, வாமநசுண்டுவிரல், காதுகள் இவ்விரண்டும் இந்த்ரனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, சுண்டுவிரலால் வலது இடது காதுகளை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீதரஹ்ருஷீகேசநடுவிரல், தோள்கள் இவ்விரண்டும் ப்ரஜாபதியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, நடுவிரலால் வலது இடது தோள்களை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

பத்மநாப, தாமோதரஉள்ளங்கை, ஹ்ருதயம் மற்றும் உச்சந்தலை இவை இறைவன் உறையுமிடங்கள். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, உள்ளங்கையால் ஹ்ருதயத்தையும் உச்சந்தலையையும் ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸமர்ப்பணம் செய்வதன் காரணம்:

நாம் எதைச் செய்கின்றோமோ, எதைப் புசிக்கின்றோமோ, எதை ஹோமம் செய்கின்றோமோ, எதை தானம் செய்கின்றோமோ, எந்தத் தவம் செய்கின்றோமோஅதை நாராயணனுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம், நாம் நமது புண்ய, பாவ வடிவமான கர்மபந்தங்களினின்று விடுபடுகிறோம். அப்போதுதான் நாம் நமது கர்மபலனுக்கேற்ப சொர்க்கம், நரகம், மறுபிறவிகள் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, நேரடியாக பரமாத்மாவுடன் ஐக்யம் அடைய முடியும். உதாரணத்திற்கு, மஹாபாரதத்தில் குருக்ஷேத்ரப் போரில் கர்ணன் தனது பாவங்களை யுத்தத்தில் ரத்தம் சிந்திக் கழித்தான். அதனால் அர்ஜுனனின் கொடிய அம்புகளால் அவனது உயிர் பிரியாதபடி அவன் செய்த தர்மம் அவனைக் காத்து, அவனை உயிர்வதை செய்தது. அவனுக்கு முக்தியளிப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணன் அந்தணர் வடிவில் வந்து அவனுடைய புண்யபலன்களை தானமாகப் பெற்றுக் கொண்டபின் கர்ணனின் உயிர் பிரிந்து, அவன் பரமாத்மாவுடன் ஐக்யமானான்.

அடுத்த பகுதியில் #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_அர்த்தத்துடன் என்னும் இத்தொடர் நிறைவு பெறுகிறது. அப்பகுதியில் ரக்ஷாஎன்னும் காப்பு மந்த்ரம், அதன் அர்த்தம், செய்முறை இவை குறித்துப் பார்க்கலாம்! 

No comments:

Post a Comment