பாகம்-16
இப்பகுதியில் “காயத்ரீ உபஸ்தானம்” என்னும் ஜபம் முடிந்ததும் காயத்ரியை துதித்து, ஸ்வஸ்தானம் (தன்னுடைய இருப்பிடம்) எழுந்தருள ப்ரார்த்திக்கும் மந்த்ரம், அர்த்தம் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம். இவற்றைப் பார்க்குமுன், நின்றுகொண்டு அல்லது உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்து முடித்தபின்பு ஒருமுறை ப்ராணாயாமம் செய்து விட்டு, அதன்பின் எழுந்து ஜபம் செய்த திசையையே நோக்கி, கைகூப்பி நின்று கொண்டு, உபஸ்தான மந்த்ரத்தைச் சொல்லி வந்தனம் செய்து, காயத்ரி தேவியை ஸ்வஸ்தானம் (தன்னுடைய இருப்பிடம்) எழுந்தருளும்படி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.
ப்ராணாயாம:
ஓம் பூ: | ஓம் புவ: | ஓகும் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓகும் ஸத்யம் ||
ஓம் தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
ஓமாபோ ஜ்யோதீ ரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவ-ரோம் ||
காயத்ரீ உபஸ்தானம் ||16||
மந்த்ரம்:
(காலையில்) ப்ராத:ஸந்த்யா உபஸ்தானம் கரிஷ்யே ||
(நடுப்பகலில்)
ஆதித்ய:ஸந்த்யா உபஸ்தானம் கரிஷ்யே ||
(மாலையில்) ஸாயம் ஸந்த்யா உபஸ்தானம் கரிஷ்யே ||
உத்தமே சிகரே
தேவீ பூம்யாம் பர்வதமூர்த்தனி | ப்ராஹ்மணேப்யோ ஹ்யனுஜ்ஞானம் கச்ச
தேவி யதா ஸுகம் ||
அர்த்தம்:
காயத்ரீ உபஸ்தானம் (ஜபம் முடிந்ததும் காயத்ரியை துதித்து, ஸ்வஸ்தானம் (தன்னுடைய இருப்பிடம்) எழுந்தருள ப்ரார்த்தித்தல்)
(ப்ராணாயாம:) ப்ராணாயாமம் செய்து, (ப்ராத:ஸந்த்யா உபஸ்தானம்) காலை ஸந்த்யோபஸ்தானத்தை (கரிஷ்யே) செய்கிறேன். (நடுப்பகலில் ஆதித்ய உபஸ்தானம், மாலையில் ஸாயம் ஸந்த்யா உபஸ்தானம்). (தேவி) ப்ரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே! (பூம்யாம்) பூமியில் (ப்ராஹ்மணேப்ய:) ப்ரம்மோபாஸனம் செய்கின்ற எங்களுக்கு (அனுஜ்ஞானம்) அனுக்ரஹத்தைச் செய்து (பர்வத மூர்த்தனி) மேருமலையினுச்சியில் (உத்தமே சிகரே) உத்தமமான சிகரத்திலுள்ள உனது ஆலயத்தில் (யதாஸுகம்) ஆனந்தமாய் (கச்ச) எழுந்தருள்வாய்.
இந்த உபஸ்தான மந்த்ரத்தில் ரிஷி, சந்தஸ் மற்றும் தேவதை: “உத்தம” இத்யனுவாகஸ்ய வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா || காயத்ர்யுபஸ்தானே விநியோக: || - இத்துடன் ஸந்த்யாவந்தனத்தின் முக்கியமான பகுதி நிறைவடைகிறது. இனி, அங்க தேவதைகளின் வந்தனம். அவற்றை, அடுத்து வரும் மூன்று பகுதிகளில் (த்ரிகால ஸூர்ய உபஸ்தான மந்த்ரங்களைப் பற்றி) பார்க்கலாம்.
No comments:
Post a Comment