பாகம்-17 (2)
இப்பகுதியில் த்ரிகால ஸூர்ய உபஸ்தான மந்த்ரங்களில் இரண்டாம் பகுதியாக, நடுப்பகல் வேளையில் சொல்லும் உபஸ்தான மந்த்ரம் பற்றி பார்க்கலாம்.
ஸூர்ய உபஸ்தானம் ||17.2||
மத்யாஹ்னே – ஆஸத்யேன ரஜஸா வர்த்தமாநோ நிவேசயன்னம்ருதம் மர்த்யஞ்ச | ஹிரண்யயேன ஸவிதா ரதேனாऽதேவோ யாதி புவனா விபச்யன் ||
உத்வயம் தமஸஸ்பரி பச்யந்தோ ஜ்யோதிருத்தரம் |
தேவந் தேவத்ரா
ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம்
|
உதுத்யம் ஜாதவேதஸம்
தேவம் வஹந்தி கேதவ:
|
த்ருசே விச்வாய
ஸூர்யம்
||
சித்ரந்தேவானாமுதகாதனீகம் சக்ஷுர்மித்ரஸ்ய வருணஸ்யாக்னே: |
ஆ ப்ரா த்யாவா
ப்ருதிவீ அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ்தஸ்துஷச்ச ||
தச்சக்ஷுர்தேவஹிதம்
புரஸ்தாச் சுக்ரமுச்சரத்
||
பச்யேம சரத: சதம், ஜீவேம சரத: சதம், நர்தாம சரத: சதம், மோதாம சரத: சதம், பவாம சரத: சதம், ச்ருணவாம சரத: சதம், ப்ரப்ரவாம சரத: சதமஜீதாஸ்யாம சரத: சதம், ஜ்யோக்ச ஸூர்யந்த்ருசே |
ய உதகான்மஹதோர்ணவாத்விப்ராஜமான: ஸரிரஸ்ய மத்யாத் ஸமா வ்ருஷபோ லோஹிதாக்ஷஸ்ஸூர்யோ விபச்சின்மனஸா புநாது ||
அர்த்தம்:
மத்யாஹ்னே (நடுப்பகலில்): (ஸத்யேன) ஆத்ம ஜோதியாலும் (ரஜஸா) கண் காணும் ப்ரகாசத்தாலும் (அம்ருதம் மர்த்யஞ்ச) தேவ உலகினரையும் மனித உலகினரையும் (நிவேசயன்) அவரவர் கர்மங்களில் புகுத்திக் கொண்டு (ஆ வர்த்தமான:) சுற்றி வருபவரான (ஸவிதா தேவ:) ஸூர்யதேவன் (ஹிரண்யேன) பொன்மயமான (ரதேன) தேரினால் (புவனா) உலகங்களை (விபச்யன்) நன்கு பார்வையிட்டுக் கொண்டு (ஆயாதி) சஞ்சரிக்கிறார்.
(உத் தமஸஸ் பரி) இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கின்ற (உத் தரம் ஜ்யோதி:) உயர்ந்த ஜோதி வடிவினராயும் (தேவத்ரா) தேவர்களையும் இரக்ஷிக்கின்றவராயும் உள்ள (தேவம் ஸூர்யம்) ஸூர்யதேவனை (பச்யந்த:) பார்ப்பவர்களான (வயம்) நாம் (உத்தமம் ஜ்யோதி:) உத்தமமான ஆன்ம ஜோதியையே (அகன்ம) அடைந்தவர்களாவோம்.
(த்யம்) அந்த ப்ரசித்தமான (ஜாதவேதஸம் தேவம்) அனைத்தையும் அறிகின்ற தேவனான (ஸூர்யம்) ஸூர்யனை (கேதவ:) கிரணங்களாகிற குதிரைகள் (விச்வாய த்ருசே) உலகோரின் தரிசனத்திற்காக (உத்வஹந்தி) உயரத் தாங்கிச் செல்கின்றன.
(மித்ரஸ்ய-வருணஸ்ய-அக்னே:) மித்ரனுக்கும் வருணனுக்கும் அக்னிக்கும் (சக்ஷு:) கண் போன்றவரும் (தேவானாம் சித்ரம் அனீகம்) விசித்ரமான ஸர்வதேவஸ்வரூபியும் ஆகிய ஸூர்யன் (உதகாத்) உயரச் செல்கிறார். (ஜகதஸ்-தஸ்துஷச்ச) அசையும் பொருள்களுக்கும் அசையாப் பொருள்களுக்கும் (ஆத்மா) ஆத்மாவாகிய (ஸூர்ய:) ஸூர்யன் (த்யாவா-ப்ருதிவீ-அந்தரிக்ஷம்) தேவலோகம், பூலோகம் அந்தரிக்ஷம் அனைத்தையும் (ஆப்ரா:) வ்யாபிக்கிறார். (புரஸ்தாத் சுக்ரம் உச்சரத்) கிழக்கில் பரிசுத்தமாய் உதித்து (தேவஹிதம் சக்ஷு:) தேவர்களுக்கு நன்மை செய்வதும் கண் போன்றதுமான (தத்) அந்த ஸூர்ய மண்டலத்தை (சரத: சதம்) நூறாண்டு (பச்யேம) கண்டு வணங்குவோம்; (ஜீவேம சரத: சதம்) அங்ஙனம் நூறாண்டு வாழ்வோம்; (நந்தாம சரத: சதம்) நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்; (மோதாம சரத: சதம்) நூறாண்டு மகிழ்வோம்; (பவாம சரத: சதம்) நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம்; (ச்ருணவாம சரத: சதம்) நூறாண்டு இனியதைக் கேட்போம்; (ப்ரப்ரவாம சரத: சதம்) நூறாண்டு இனியதையே பேசுவோம்; (அஜீதாஸ்யாம சரத: சதம்) நூறாண்டும் தீமைகளால் சபிக்கப் படாதவர்களாகவே வாழ்வோம். (ஜயோக் ச) இங்ஙனம் நீண்ட காலம் (ஸூர்யம்) ஸூர்யதேவனை (த்ருசே) பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகின்றோம்.
(வ்ருஷப:) விரும்பிய பலனையளிப்பவரும், (லோஹிதாக்ஷ:) சிவந்த கண்களை உடையவரும் (விபச்சித்) எல்லாமறிந்தவருமான (ய:) எவர் (விப்ராஜமான:) எத்திக்கிலும் ப்ரகாசிப்பவராய் (மஹத: அர்ணவாத்) பெரிய ஸமுத்ரத்தின் (ஸரிரஸ்ய மத்யாத்) ஜலமத்தியிலிருந்து (உதகாத்) காலையில் உதித்தாரோ, (ஸ: ஸூர்ய:) அந்த ஸூர்யதேவன் (மா) என்னை (மனஸா) முழுமனத்துடன் (புநாது) புனிதனாக்கி அருள்வாராக!
செய்முறை:
ஜபம் செய்த திசை நோக்கி, கைகூப்பி நின்று கொண்டு ஸூர்யமண்டலத்தில் விளங்கும் பரமாத்மாவை இந்த மந்த்ரத்தால் துதித்து வணங்க வேண்டும். அப்போது, “பச்யேம சரத: சதம்” என்ற மந்த்ரம் சொல்லும்போது “வருணபாசம்” என்னும் முத்திரையில் விரல்களின் நடுவிலுள்ள துவாரத்தின் மூலம் ஸூர்யனைப் பார்க்க வேண்டும்.
இம்மந்த்ரத்தைச் சொல்வதன் நோக்கம் என்ன என்பது, “மித்ரனுக்கும் வருணனுக்கும்” என்று தொடங்கி, “பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகின்றோம்” என்று முடியும் பத்தியை கவனமுடன் படித்தால் புரியும். அவ்வாறு புரியும்போது, நம் முன்னோர்கள் மனித சமுதாயத்தின் மீது கொண்டிருந்த அக்கறை எந்தளவுக்கு உயர்ந்ததாக இருந்தது என்பதும் புரியும்! மனிதகுலம் நலத்துடனும், வளத்துடனும், நல்லவர்களாகவும் விளங்க வேண்டுமென்பதற்காக இம்மந்த்ரத்தை உருவாக்கிய அந்த ஆத்மா(க்களுக்கு)வுக்கு என்னுடைய ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்!
அடுத்த பகுதியில் மாலை வேளையில் சொல்ல வேண்டிய ஸூர்ய உபஸ்தான மந்த்ரம் குறித்துப் பார்க்கலாம்!
No comments:
Post a Comment