பாகம்-21
ஹரிஹர வந்தனம் ||21||
விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமான “ஹரிஹர வந்தனம்” பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்!
ருதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்களம் | ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நம: | விச்வரூபாய வை நம ஓம் நம இதி ||
அர்த்தம்:
ஹரிஹர வந்தனம் – (ருதம்) காணும் பொருட்களின் அழகானவனை, (ஸத்யம்) காட்சிக்கு ஆதாரமாக உள்ளவனை, (பரம் ப்ரஹ்ம புருஷம்) பரப்ரஹ்மத்தை உடல்தோறும் உறைபவனை, (க்ருஷ்ண பிங்களம்) கருமேனித் திருமாலும், செம்மேனிச் சிவனும் ஒன்றாயியைந்த வடிவையுடையவனை, (ஊர்த்வரேதம்) வீர்யத்தின் மேல்நோக்கு உடையவனை, (விரூபாக்ஷம்) முக்கண்ணனை, (விச்வரூபாய வை) எல்லாந்தன் வடிவாய்க் கொண்டவனை (நம:) நமஸ்கரிக்கின்றேன்! (விச்வரூபாய வை நம: ஓம் நம: இதி) “ஓம் நம:” என்று, எல்லாந்தன் வடிவாய்க் கொண்டவனுக்குப் பன்முறை நமஸ்காரம்!
செய்முறை:
மேற்கு நோக்கி நின்று அஞ்சலி செய்து, இம்மந்த்ரத்தால் ஹரிஹர வந்தனம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட மந்த்ரத்தில் “ம்” என்று முடிகின்ற சொற்களைப் பார்க்கின்றோம். அவை ஸம்ஸ்க்ருதத்தின் இலக்கணப்படி, இரண்டாம் வேற்றுமையில் அமைந்துள்ளன.
ஸூர்யநாராயணனுக்குச் செய்கின்ற நமஸ்கார மந்த்ரமான “ஸூர்யநாராயண வந்தனம்” பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!
No comments:
Post a Comment