பாகம்-8
இப்பகுதியில் “அர்க்யப்ரதாநம்” பற்றி பார்க்கலாம்.
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: | தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
(ப்ராத: காலே – 3 முறை; மத்யாஹ்நே – 2 முறை; ஸாயங்காலே – 3 முறை அர்க்ய ப்ரதாநம் செய்ய வேண்டும்.)
அர்த்தம்:
அர்க்யப்ரதாநம் (அர்க்யம் விடுதல்) : (ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:) ஓங்காரப் பொருளான பகவானே! பூலோகமும், புவர்லோகமும், ஸுவர்லோகமும் (ய:) எந்த பரமாத்மா (ந:) நம்முடைய (திய:) புத்தி, சக்திகளை (ப்ரசோதயாத்) தூண்டுகிறாரோ, (தத்) அந்த (ஸவிது:) அனைத்தையும் படைக்கிறவரான (தேவஸ்ய) பகவானுடைய (வரேண்யம்) சிறந்த (பர்க்க:) ஜோதிஸ்வரூபத்தை (தீமஹி) த்யானிப்போம்.
(காலையில் 3 முறை; மத்யானத்தில் 2 முறை;
மாலையில் 3 முறை அர்க்யம் விட வேண்டும்.)
செய்முறை:
காலையில் ஸூர்யோதயத்திற்கு முன் கிழக்கு நோக்கி நின்றுகொண்டு, மந்த்ரத்தை ஜபித்து, குதிகாலைச் சிறிது தூக்கி, இரண்டு கைகளிலும் நிறைய ஜலம் எடுத்து, கைகளை உயர்த்தி, மூன்று தடவை அர்க்யம் விட வேண்டும். நடுப்பகலில் வடக்கு முகமாய் நின்று கொண்டு இரண்டு முறையும்; மாலையில் ஸூர்யாஸ்தமனத்திற்கு முன் மேற்கு நோக்கி உட்கார்ந்து கொண்டு மூன்று முறையும் அர்க்யம் விட வேண்டும். (காணாமல், கோணாமல், கண்டு கொடு என்பது பழமொழி. காணாமல் என்றால், காலையில் ஸூர்யோதயத்திற்கு முன்; கோணாமல் என்றால், நடுப்பகலில் ஸூர்யன் உச்சியிலிருக்கும் போது; கண்டு என்றால், மாலையில் ஸூர்யாஸ்தமனத்திற்கு முன் என்று பொருள்.)
கட்டைவிரல் மற்ற விரல்களுடன் சேர்ந்தால், அது ராக்ஷஸ முத்திரையாகையால் கட்டைவிரல் சேராமல் மற்ற இரு கைவிரல்களையும் சேர்த்து நதியிலோ, தடாகத்திலோ அர்க்யப்ரதானம் செய்வது சிறந்தது. வீட்டில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு செய்யும்போது, இடதுகை கட்டைவிரல் ஆள்காட்டி விரல் இரண்டிற்கும் நடுவில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு, அத்துடன் வலது கையைச் சேர்த்து இரு கைகளாலும் அர்க்யம் விடுதல் சிறந்தது.
அர்க்யப்ரதாநம் (அர்க்யம் விடுதல்) : ஓங்காரப் பொருளான பகவானே! பூலோகமும், புவர்லோகமும், ஸுவர்லோகமும் எந்த பரமாத்மா நம்முடைய புத்தி, சக்திகளைத் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தை த்யானிப்போம்.
No comments:
Post a Comment