பாகம்-4
ஸங்கல்ப: ||4||
மமோபாத்த-ஸமஸ்த-துரித-க்ஷய-த்வாரா ஸ்ரீபரமேஸ்வர-ப்ரீத்யர்த்தம்1 ப்ராத: ஸந்த்யா-முபாஸிஷ்யே || (மாத்யான்ஹிகம் கரிஷ்யே || ஸாயம் ஸந்த்யா-முபாஸிஷ்யே || )
(1ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் – ஸ்ரீ பகவதாஜ்ஞயா, பகவத் ப்ரீத்யர்த்தம்)
மந்த்ரத்தின் அர்த்தம்:
ஸங்கல்பம் (தெளிந்த தீர்மானம்) : (மம உபாத்த) என்னால் அடையப்பட்ட (ஸமஸ்த-துரித) எல்லாப் பாவங்களையும் (க்ஷயத்வாரா) நசிக்கச் செய்வதின் மூலம் (பரமேஸ்வர-ப்ரீத்யர்த்தம்) பகவானுடைய அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு (ப்ராத:) காலையில் (ஸந்த்யாம்) ஸந்த்யாதேவியை (உபாஸிஷ்யே) வழிபட ஆரம்பிக்கின்றேன்.
(மாத்யான்ஹிகம்) உச்சி வேளையில் (கரிஷ்யே) செய்கிறேன்.
(ஸாயம்) அந்திப் பொழுதில் (ஸந்த்யாம்) ஸந்த்யாதேவியை (உபாஸிஷ்யே) வழிபட ஆரம்பிக்கின்றேன்.
ப்ராணாயாமத்திற்குப் பின் ஸங்கல்பம் செய்த பின்புதான் எச்செயலையும் ஆரம்பிக்க வேண்டும். ஸங்கல்பத்திற்கு, வலது தொடை மீது இடது கை கீழும், வலது கை அதன் மேலுமாக (இடது உள்ளங்கை மீது வலது உள்ளங்கை உள்ளவாறு) வைத்துக் கொள்ளவும்.
ஏன் ஸங்கல்பம் செய்கிறோம்?
ஸங்கல்பம் (தீர்மானம்) மனதிலும் பெரிது. எப்போது ஒருவன் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஸங்கல்பிக்கிறானோ (தீர்மானம் செய்கிறானோ), அப்போது தெளிவுற யோசித்துத் தீர்மானிக்கிறான். தீர்மானத்தைப் பேச ஆரம்பிக்கிறான். பேச்சு, பெயர் வடிவமாகிறது. பெயர் வடிவில் மந்த்ரங்கள் ஒடுங்குகின்றன. மந்த்ரங்களில் கர்மங்கள் (செயல்கள்) ஒடுங்குகின்றன.
இதையே வள்ளுவர், “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர், எண்ணியர் திண்ணியராகப் பெறின்” என்றும், “எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு” என்றும் ஸங்கல்பத்தின் (தீர்மானத்தின்) சிறப்பைக் கூறுகிறார்.
ஒருவர், தான் செய்து முடிக்க எண்ணும் செயலை தானே நேரடியாகச் செய்வாரெனின், பலன் எண்ணியவாறு, விரைவில் கிட்டும். அதே செயலைப் பிறரைக் கொண்டு முடிக்க எண்ணுவாரேயானால், அவர் எவரிடம்/எவர்களிடம் செயலை ஒப்படைத்தாரோ, அவர்/அவர்கள் தான் எண்ணியவாறு அச்செயலை முடிக்கின்றாரா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கவில்லையெனில், தீர்மானம் தோல்வியில் முடியும். உதாரணம் 8, நவம்பர் 2016!
அடுத்த பகுதியில் ஜலதேவதைகளிடம் வைக்கின்ற கோரிக்கையான, “மார்ஜனம்” என்னும் மந்த்ர ப்ரயோகம் குறித்துப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment