Sunday, June 13, 2021

பாகம்-24

இப்பகுதியில்ரக்ஷாஎன்னும் காப்பு மந்த்ரம், அதன் அர்த்தம், செய்முறை இவை குறித்துப் பார்க்கலாம்.

ரக்ஷா ||24||

மந்த்ரம்:

அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம் |

பரா துஷ்வப்னியகும்ஸுவ |

விச்வானி தேவ ஸவிதர்-துரிதானி பரா ஸுவ|

யத் பத்ரம் தன்ம ஆஸுவ ||

இதி ஸந்த்யாவந்தனஉத்தரபாக: ||

 அர்த்தம்:

ரக்ஷா (இரக்ஷை அல்லது காப்பு) – (தேவஸவித:) ஸவித்ரு தேவனே! (அத்ய) இப்போது (:) எங்களுக்கு (ப்ரஜாவத் ஸௌபகம் ஸாவீ:) ஸந்ததிகளுடன் கூடிய ஸௌபாக்யத்தை அருள வேண்டும். (துஷ்வப்னீயம்) கெட்ட கனவின் நிமித்தத்தையும் பலனையும் (பரா ஸுவ) விலக்கியருள்வீர். (யத்) எது (பத்ரம்) உயர்ந்த நன்மையோ (தத்) அதை மே எனக்கு (ஆஸுவ) கூட்டி வைத்து அருளுதல் வேண்டும்.

இங்ஙனம் ஸந்த்யாவந்தன உத்தரபாகத்திற்குப் பதவுரை முற்றிற்று.

செய்முறை:

ஜபம் செய்த இடத்தில் தீர்த்தத்தைப் ப்ரோக்ஷித்து (தெளித்து) பின் குனிந்து வலது பவித்ர விரலால் பூமியைத் தொட்டு இம்மந்த்ரத்தை ஜபித்து, புருவ மத்தியில் இரக்ஷை இட்டுக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட மந்த்ரத்தின் வாயிலாக இரண்டு விஷயங்களை நாம் அறியலாம்:

(1) கனவிலுங்கூட கெட்ட எண்ணங்களும் காட்சிகளும் தோன்றாமலிருந்தால்தான் மனது பரிசுத்தமாயிற்று எனலாம்.

(2) யத் பத்ரம்எது உண்மையில் நமக்கு நன்மை தரும் என்பது நமக்கே தெரியாது. ஆகையால், “எது நன்மையோ, அதைத் தந்தருள்வாய்என்று பகவானிடம் வேண்டிக் கொள்ளுதலே சிறந்தது.

 

இத்துடன் #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_அர்த்தத்துடன் என்னும் இத்தொடர் நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment