Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-41

ஆக, அடியேன் இப்போது உங்கள் சித்தப்படி பிறந்தாக வேண்டும் அல்லவா?”

ஆம்! வேறென்ன?”

என்றால், தங்களுடைய கட்டளையை அடியேன் சிரமேற்கொள்கிறேன். இருப்பினும் அடியேனுக்குத் தாங்கள் ஒரு வரமளிக்க வேண்டும்!”

என்ன வரம் வேண்டும்?”

எனக்கென்னவோ, அடியேன் நிறைய பிறவிகளெடுத்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன். அப்பிறவிகளால் அடியேனுடைய ஜீவன் மிகவும் இளைத்து விட்டேன், களைத்து விட்டேன். மீண்டும் பிறவியெடுத்து அதே ஆசாபாசங்கள், விருப்புவெறுப்புகள், அவற்றால் விளையும் பாவபுண்யங்கள் என்றால் மீண்டும் மீண்டும் அடியேன் பிறக்க வேண்டியிருக்கும். அடியேனுக்கும் சிறிது காலம் ஓய்வு வேண்டும் என்று இந்த ஜீவன் விழைகிறது.”

சரி, அதற்காக என்னை என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?”

இனி எடுக்கும் பிறவியிலாவது அடியேன் முற்பிறவியில் கிடைத்த குடும்பத்தைவிட மேம்பட்ட ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டும்! அதனால் அப்பிறவியில் அடியேன் வெறும் புண்யகார்யங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். அடியேனால் நிகழ்த்தப்படும் கர்மங்களால் அடியேனுடைய வாழிடம் முழுமையும் செழிப்படைய வேண்டும், அனைவரும் நற்சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபட்டு அவர்களுடைய ஆன்மாவும் மேன்மையடைந்து, தங்களின் திருவடி நிழலில் தங்கியிருந்து அவர்தம் சோர்வு நீங்க வேண்டும்!”

மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி! அதையேதான் யாமும் தீர்மானித்துள்ளோம். நீ விரும்பியவாறே ஒரு குடும்பத்தில் நீ பிறப்பாய்! ஆனால் அந்தக் குடும்பத்தோடு கடைசிவரை உன்னால் வாழ முடியாது!”

ஏன் ஸ்வாமீ? என்றால் அவர்கள் என்னைப் பிரிந்து துன்பப் படுவார்களே! அவர்களுக்கு என்ன ஆறுதல்?”

வருந்த வேண்டாம்! உன்னுடைய பிரிவு என்பது, உன்னுடைய அப்பிறவியின் மரணமன்று! அக்குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறொரு புண்ய கார்யங்களைச் செய்யும் இடத்திற்கு நீ புலம் பெயர்ந்து செல்வாய்! அவ்வாறு செய்வதால் உன் அப்பிறவியின் பெற்றோர்களுக்குப் பெருமையும், புகழும், அளவற்ற புண்யமும் கிட்டும்!”

அப்படியென்றால், அடியேனின் அந்தப் பிறவியில் அடியேனுக்கு விதிக்கப்பட்ட கடமைகள்தான் என்ன?”

அதை நீ அங்கே பிறந்து, புலம் பெயர்ந்தபின்பு உணர்ந்து கொள்வாய்! உன்னுடைய புதிய பொறுப்பை நீ ஏற்றவுடன் அவ்வாறு நீ உணரும் சக்தியை அத்தருணத்தில் யாம் உனக்கு அருள்வோம்!”

அவ்வாறே ஆகட்டும் ஸ்வாமி! அடியேனின் அடுத்த பிறவியில் எமக்கு வாய்க்கப் போகும் அந்தப் பெற்றோர் யார்?”

பரமாத்மா புன்சிரிப்புடன் சொன்னார், “அவர்களைத் தேர்வு செய்யும் உரிமையை யாம் உனக்கே அளிக்கிறோம்! அடுத்த பிறவி நீ விரும்பியபடி உனக்குக் கிடைக்க வேண்டுமென்றால், உனக்குண்டான சரியான பெற்றோரை நீ  தேடிப் பிடிப்பதே உனக்கு நான் வைக்கும் தேர்வு!”

அவ்வாறே ஆகட்டும் ஸ்வாமி! தன்யனானேன்! அடியேனுக்குண்டான கடமையை இந்த நொடியிலிருந்து ஆரம்பிக்க அடியேனை ஆசீர்வதித்து அனுப்புங்கள்!”

பரமாத்மம்ஸ்தவ ப்ராப்தௌ குசலோஸ்மி ந ஸம்சய: |
ததா2பி மே மநோ து3ஷ்டம் போ4கே3ஷு ரமதே ஸதா3 || 1 ||

யதா3 யதா3 து வைராக்3யம் போ4கே3ப்4யஸ்ச கரோம்யஹம் |
ததை3வ மே மநோ மூட4ம் புநர்போ4கே3ஷு க3ச்ச2தி || 2 ||

போ4கா3ந்பு4க்த்வா முத3ம் யாதி மநோ மே சஞ்சலம் ப்ரபோ4 |
தவ ஸ்ம்ருதி யதா3 யாதி  ததா3 யாதி ப3ஹிர்முக2ம் || 3 ||

ப்ரத்யஹம் சாஸ்த்ரநிசயம் சிந்தயாமி ஸமாஹித: |
ததா2பி மே மநோ மூட4ம் த்யக்த்வா த்வாம் போ43மிச்ச2தி || 4 ||

சோகமோஹௌ மாநமதௌ3 தவாஞாநாத்34வந்தி வை |
யதா3 பு3த்3தி4பத2ம் யாஸி யாந்தி தே விலயம் ததா3 || 5 ||

க்ருபாம் குரு ததா2 நாத2 த்வயி சித்தம் ஸ்தி2ரம் யதா2 |
மம ஸ்யாஜ்ஞாநஸம்யுக்தம் தவ த்3யாநபராயணம் || 6 ||

மாயயா தே விமூடோ4ஸ்மி ந பஸ்யாமி ஹிதாஹிதம் |
ஸம்ஸாராபாரபாதோ2தௌ4 பதிதம் மாம் ஸமுத்34 || 7 ||

பரமாத்மம்ஸ்த்வயி ஸதா3 மம ஸ்யாந்நிசஸ்சலா மதி: |
ஸம்ஸாரது3:23ஹநாத்த்வம் ஸதா3 ரக்ஷகோ மம || 7 ||

பராத்மந இத3ம் ஸ்தோத்ரம் மோஹவிச்சே23காரகம் |
ஞாநத3ம் ச ப4வேந்ந்ருணாம் யோகா3நந்தேந நிர்மிதம் || 8 ||

இதி ஸ்ரீயோகா3நந்த3தீர்த2விரசிதம் பரமாத்மாஷ்டகம் ஸம்பூர்ணம் ||

பரமாத்மா தமது இரு கரங்களை உயர்த்திக் கூறினார், “விஜயீபவ!”


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment