ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-36
இப்போது
நான்
பிறந்த
குழந்தை
நிலையிலிருக்கிறேன்
என்று
சொன்னேன்
இல்லையா?
இப்போதுள்ள
நிலையில்
எனது
நடமாட்டம்
குறைந்துவிட்டது.
எதற்கும்
அடுத்தவர்களை
சார்ந்திருக்கும்
நிலை.
பசித்த
வேளைக்கு
என்னுடைய
மருமகள்
உணவளித்து
விடுகிறாள்.
எனது
மகன்
என்னை
சுத்தம்
செய்கிறான்.
இப்போது
நான்
இருவருக்கும்
ஒரு
கைக்குழந்தையைப்
போல
இருக்கிறேன்.
நடமாட்டம்
இருந்தபோது
அவர்களுடைய
பல
வேலைகளை
நான்
பகிர்ந்து
கொண்டிருந்தேன்.
பேரப்பிள்ளைகளை
அவர்களுடைய
பள்ளியிலிருந்து
அழைத்து
வருவது,
அவர்களுக்கு
வேண்டியதை
செய்து
தருவது,
வீட்டிற்குத்
தேவையானவற்றை
வாங்கி
வருவது,
வங்கிப்பணி
மற்றும்
செலுத்த
வேண்டிய
கட்டணங்களை
செலுத்துவது
இப்படி
பலவற்றை
செய்து
அவர்களின்
பணிச்சுமையைக்
குறைக்க
முடிந்தது.
அவர்களும்
வெளியில்
என்னைப்
பற்றி
இப்படியெல்லாம்
நானவர்களுக்கு
உதவியாக
இருப்பதை
பெருமையாக
சொல்லுவதை
நானும்
உணர்ந்திருக்கிறேன்.
நான்
இப்பொழுதுள்ள
நிலையில்
அவர்களுக்கு
எவ்வாறு
உதவ
முடியும்?
அவர்களுடைய
பணிச்சுமையை
குறைக்க
வேண்டுமே!
எனவே,
திட
உணவுகளை
தவிர்க்க
முடிவுசெய்து
விட்டேன்.
வெறும்
திரவமாக
மட்டுமே
எடுத்துக்
கொள்வது
என்றும்
தீர்மானித்தேன்.
அதனால்
நானிருக்குமிடத்தைத்
தூய்மையாக
இருக்கும்படி
பார்த்துக்
கொள்கிறேன்.
இதன்
காரணமாக
எனது
உணவுப்
பையும்
வழியும்
சுருங்கி
விட்டதையும்
நானறிவேன்.
என்ன
செய்வது?
எனக்கு
வேறு
வழியில்லை.
இதற்கு
மேலும்
என்னால்
அவர்களுக்கு
உதவ
முடியவில்லை.
எனக்கு
இப்போது
எந்தப்
பணியும்
இல்லாததால்
என்னுடைய
ஒரே
பணி,
இறைவனை
எப்போதும்
நினைத்துக்
கொண்டிருப்பது.
இதுவரை
நான்
கற்ற
ஸ்லோகங்களில்
எதையாவது
மனசுக்குள்
சொல்வது
என்றிருக்கிறேன்.
ஜனித்த
பொழுதில்
மனதிலிருந்த
கேள்விகளுக்கு
விடை
கிடைத்துவிட்டது.
இப்பொழுது
வாழ்வில்
ஒரு
முறை
மட்டுமே
கிடைக்கப்
போகும்
அந்த
அனுபவம்
எப்படி
இருக்கும்
என்பதைத்
தெரிந்து
கொள்ள
ஆவலாக
இருக்கிறேன்.
பல
முறை
விளையாடியதில்
கிடைத்த
அனுபவம்;
பல
நூல்களைக்
கற்ற
அனுபவம்;
கற்ற
அறிவினால்
கிடைத்த
அனுபவம்;
அறிவைக்
கொண்டு
அந்த
அறிவை
உரிய
இடங்களில்
பயன்படுத்திய
மற்றும்
பகிர்ந்த
அனுபவம்;
ரசனைக்குரிய
பல
விஷயங்களை
அறிந்து
கொண்ட
அனுபவம்;
அந்த
விஷயங்களை
பலமுறை
துய்த்த
அனுபவம்;
இல்வாழ்க்கை
அனுபவம்
இப்படி
பல
அனுபவங்கள்
வாழ்க்கையில்
பலமுறை
திரும்பத்
திரும்ப
கிடைத்திருக்கின்றன.
ஆனால்
வாழ்க்கையில்
ஒரே
முறை
மட்டும்
கிட்டும்
அனுபவம்
என்று
நான்
உணர்ந்தவை
இரண்டு.
ஒன்று
பிறப்பு.
உங்கள் அனைவரையும் முதல்முறையாக சந்தித்தபோது
அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொண்ட அந்தத் தருணம் இப்போதும் எனக்கு நன்றாக
நினைவிருக்கிறது. இன்னொன்று
இறப்பு.
இந்த
அனுபவம்
இன்னும்
கிடைக்கவில்லை.
அந்த
நொடிகள்
எப்படியிருக்கும்?
அது
பலவகையாக
இருக்கும்
என்பதை
பிற
மனிதர்களின்
இறப்பின்
மூலம்
ஓரளவு
உணர்ந்திருக்கிறேன்.
இருந்தாலும்
என்னுடைய
சொந்த
அனுபவம்
என்று
வரும்போது,
அது
மனசுக்குள்
சற்றே
பரபரப்பை
அதிகமாக்குகிறது
என்றால்,
அது
மிகையில்லை!
இந்த உடலை விடும்
அனுபவம் கிடைக்கிறது,
சரி! ஆனால் அதற்குப் பின்னும் என்னால் இப்போதுள்ள
மாதிரியே உணர்வுடன் இருப்பேனா? உங்களுடன் இப்போது இப்படி பேசிக்
கொண்டிருப்பது போல அதற்குப் பின்னும் என்னால் பேச முடியுமா? இதுவரை
அப்படி யாரும் பேசியதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இருப்பினும்
என்னுடைய இந்தக் கேள்வி இந்த உடம்பில் இப்போதுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவாத்மாவின்
கேள்வி!
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment