Sunday, May 3, 2020

Chandran details

चन्द्रगायत्रि
ॐ पद्मध्वजाय विद्महे हेमरूपाय दीमहि तन्नो सोमः प्रचोदयात्

சந்த்ர காயத்ரி :
ஓம் பத்3மத்4வஜாய வித்3மஹே ஹேமரூபாய தீ3மஹி
தந்நோ ஸோம: ப்ரசோத3யாத்

चन्द्र बीजमन्त्रम्
ॐ ऐं क्लीं सोमाय नमः ||

சந்த்ர பீஜமந்த்ரம்
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

चन्द्र मन्त्रम्
दधिशन्ख तुषाराभं क्षीरोदार्णव सम्भवम् ।
नमामि शशिनं सोमं शंभोर्मुकुटभूषणम् ॥

சந்த்ர மந்த்ரம்
3தி4சங்க2 துஷாராப4ம் க்ஷீரோதா3ர்ணவ ஸம்ப4வம் |
நமாமி சசிநம் ஸோமம் சம்போ4ர்முகுடபூ4ஷணம் ||

சந்த்ரனுக்குரிய விவரங்கள்

நிறம்: வெண்மை; அதிதேவதை: வருணன்; ப்ரத்யதி தேவதை: பார்வதி;
ரத்னம்: முத்து; மலர்: வெள்ளை அலரி; ஸமித்து: பலாசம்;
திக்கு: தென் கிழக்கு; உலோகம்: ஈயம்; குணம்: (வளர்பிறை) சாந்தம்; (தேய்பிறை) கொடூரம்; வாஹநம்: வெண்குதிரை; தான்யம்: நெல்;
நட்பு: ஸூர்யன்; பகை: ராஹு; சமம்: செவ்வாய், வியாழன், சுக்ரன், சனி;
ஆட்சி: கடகம்; நீசம்: வ்ருச்சிகம்; உச்சம்: ரிஷபம்; நக்ஷத்ரங்கள்: ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்; பால்: பெண்; திசை காலம்: 10 ஆண்டுகள்; கோசார காலம்: 2¼ நாட்கள்; வஸ்த்ரம்; வெண்மை; ஸ்தலம்: திங்களூர், திருப்பதி;


நைவேத்யம்: நெய் பாயஸம்




Suryan details

सूर्यगायत्रि
ॐ अश्वद्वजाय विद्महे पासहस्ताय दीमहि तन्नो सूर्यः प्रचोदयात्

ஸூர்ய காயத்ரி :
ஓம் அஸ்வத்3வஜாய வித்3மஹே பாஸஹஸ்தாய தீ3மஹி
தந்நோ ஸூர்ய: ப்ரசோத3யாத்

सूर्य बीजमन्त्रम्
ॐ ह्रीं ह्रौं सूर्याय नमः ||

ஸூர்ய பீஜ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸூர்யாய நம:

सूर्य मन्त्रम्
जपाकुसुम सन्काशं काश्यपेयम् महाद्युतिम्
तमोरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्

ஸூர்ய மந்த்ரம்
ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்3யுதிம் |
தமோரிம் ஸர்வபாபக்4நம் ப்ரணதோஸ்மி தி3வாகரம்

ஸூர்யனுக்குண்டான விவரங்கள்

நிறம்: வெண்மை; அதிதேவதை: அக்நி; ப்ரத்யதிதேவதை: ருத்ரன்;
ரத்னம்: மாணிக்கம்; மலர்: செந்தாமரை; ஸமித்து: எருக்கு; திக்கு: கிழக்கு;
உலோகம்: தாமிரம்; குணம்: தாமஸம்; வாஹநம்: ஏழு குதிரைகள்;
தான்யம்: கோதுமை; நட்பு: சந்த்ரன், வியாழன், செவ்வாய்;
பகை: சுக்ரன், சனி, ராஹு, கேது; சமம்: புதன்; ஆட்சி: ஸிம்ஹம்;
நீசம்: துலாம், உச்சம்: மேஷம்; நக்ஷத்ரங்கள்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம்; பால்: ஆண்; திசை காலம்: 6 ஆண்டுகள்;
கோசார காலம்: 1 மாதம்; வஸ்த்ரம்: சிவப்பு; ஸ்தலம்: ஸூர்யனார் கோவில், திருக்கண்டியூர், வீரட்டம், பனங்காட்டூர்; நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்




Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-10

இப்போதெல்லாம் என்னால நிறைய புரிஞ்சுக்க முடியுது. என்னைப் பார்க்கறவங்க, எடுத்து வெச்சுக்கிறவங்க, பேசறவங்க, விளையாடறவங்க எல்லாருக்குமே ரெண்டு பேர் இருக்கு. அம்மா, அப்பா, அத்தை, மாமா இவங்களோட இன்னும் ரெண்டு பேர் வீட்ல இருக்காங்க. அவங்கள்ள பார்க்க அம்மா மாதிரி இருக்கறவங்க பாட்டி, அப்பா மாதிரி இருக்கறவங்க தாத்தா.

அதே மாதிரி, அப்பப்ப என்னை சிலபேர் பார்க்க வருவாங்க. அவங்கள்ள சில பேர் சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா அப்படின்னும் புரிஞ்சுது. இவங்கல்லாம் இங்க வர்ற மாதிரி, நாங்களும் அவங்க வீட்டுக்குப் போவோம். அங்கேயும் நான் இங்கே பார்க்கிற மாதிரியே நிறைய பேர் இருக்காங்க. ஆனா அவங்க பெயர் என்னன்னு எனக்குத் தெரியலை. அதனால, அவங்களையெல்லாம் அத்தை, மாமா அப்படித்தான் சொல்றேன்.

நான் இங்க இருக்கும்போது, எனக்கு விளையாட வெச்சிருக்கிற பொம்மை எல்லாம் அங்கே நடக்குது, ஓடுது, ஒண்ணு ரெண்டு படபடன்னு அடிச்சுக்கிட்டு அப்படியே மேல போகுது. அதெல்லாம் என்ன அப்படின்னு பாட்டி தாத்தாகிட்ட கைய காட்டிஊம் ஊம்அப்படின்னேன். அவங்க அதோட பெயரெல்லாம் சொன்னாங்க. அப்படி நான் என்னெல்லாம் தெரிஞ்சிகிட்டேன்? அது தனிக்கதை. அதை அப்புறமா சொல்றேன்.

இப்ப பால் தவிர நிறைய புதுசு புதுசா சாப்பிடத் தராங்க. ஏன்னா, எனக்கு பல் முளைச்சிடுத்துல்ல? அதனால, பாட்டி எனக்கு விதவிதமா சாப்பிடத் தராங்க. இப்பல்லாம் அம்மாகிட்டருந்து பால் கிடைக்கிறதில்லை. ஏன்னு தெரியலை. கொஞ்ச கொஞ்சமா அம்மாகிட்ட பால் குடிக்கறது நின்னு போச்சு. அது வேணும்னு கூட இப்ப எனக்குத் தோணலை. அதுக்கு பதிலா, பாட்டி இப்ப நிறைய விதவிதமா தரதால, அம்மா பால் எனக்கு மறந்து போயிடுச்சு.

இருட்டுல இருந்தபோது எதுவும் எனக்குத் தெரியலை. வெளியே வந்தபின்னாடி, கண்ல பார்க்கறதெல்லாம் விதவிதமா இருக்கறதுக்கு காரணம் நிறம் அப்படின்னு புரிஞ்சது. எனக்கு இப்ப சில நிறங்கள், அதோட பெயர் எல்லாம் தெரியுமே! என்னென்ன பெயர்னு சொல்லட்டுமா?

வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு, நீலம் இப்படியெல்லாம் ஒவ்வொண்ணுக்கும் ஒரு பெயர் இருக்கு! உங்களுக்குத் தெரியுமோ? அந்தப் பெயரையெல்லாம் இப்ப என்னால சொல்ல முடியலை, ஆனால் எது என்ன நிறம்னு பார்த்த புரியுது!

பாட்டி எனக்கு சாப்பிடக் கொடுப்பதில் ஒண்ணு வெள்ளையா இருக்கு. அது பேர் சாதம்! சரியா? அப்புறம், மஞ்சளா ஒண்ணு இருக்கு! அது பேர் பருப்பு! சரியா? இந்த ரெண்டையும் கலந்து, கூடவே தண்ணி மாதிரி ஒண்ணு இருக்கும். அது பேர் ரசம் அப்படின்னு பாட்டி பேசிக்கிட்டாங்க. இந்த எல்லாத்தையும் கலந்து பாட்டி எனக்கு வாய்ல குடுப்பாங்க. அது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது. அதை பாட்டி பப்புமம்மு அப்படின்னு சொல்வாங்க. அதே மாதிரி, சாதத்தில் வெள்ளையா, தண்ணி மாதிரி இருக்கும், அதை ஊத்தி, கலந்து அதையும் கொடுப்பாங்க. அதுக்கு தச்சி மம்மு அப்படின்னு பாட்டி சொல்வாங்க. அதை ஊட்டி விடும்போது, சமயத்துல எனக்கு ஏதாவது நினைப்பு வந்துடும். அதனால, பாட்டி ஊட்டும்போது வாயைத் திறக்க மாட்டேன். தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டி வேணாம் அப்படின்னு சொல்வேன். அந்த சமயத்துல என்னை எடுத்து வெச்சுகிட்டு, வீட்டுக்கு வெளில கூட்டிட்டுப் போய் எதை எதையோ காட்டுவாங்க. நானும் அதையெல்லாம் பார்த்துக்கிட்டே ஆஆன்னு வாயை திறப்பேன். சட்டுனு ஊட்டிடுவாங்க. நானும் கண்ல பார்த்ததை நினைச்சுக்கிட்டே சாப்பிடுவேன்.

சிலசமயம், இருட்டு நேரத்துல வாசலில் வந்து மேலே கையைக் காட்டி என்னைப் பார்க்கச் சொல்வாங்க. அது பார்க்க வெள்ளையா இருக்கும். பெரிசா இருக்கும். அது பேர் நிலா அப்படின்னு பாட்டி சொன்னாங்க. அதைப் பார்க்கும்போது, வீட்டில் அம்மா சாப்பிட ஒண்ணு செய்வாங்க. அது மாதிரியே இருக்கும். அம்மா செஞ்ச அது பேர் என்ன? அது ரெண்டு விதமா இருக்கும். அதை செய்யும்போது அதும்பேரைச் சொல்லி நான் கேட்டிருக்கேன். ஒண்ணு பேரு தோசை, இன்னொண்ணு பேரு ஆப்பம்!

இந்த சாதம், தோசை, ஆப்பம்னு சொன்னதால, இப்ப எனக்கு சாப்பிடணும்னு தோணுது! அப்படியே, அப்பப்ப மனசுக்குள்ள அந்தக் கேள்விகள் வருமே! அதுவும் வருது!

நான் யார்? எங்கிருந்தேன்? எப்படி அந்த இருட்டான இடத்துக்கு வந்தேன்? ஏன் இப்போது இங்கே இருக்கேன்? புதுசு புதுசா நிறைய தெரியுதே? அது எப்படி? அதெல்லாம் எதுக்காக எனக்குத் தெரியுது?

ம்ஹும்! ஏன்னு தெரியலை! அதனால அயர்ச்சியா இருக்கு! இப்ப நான் சாப்பிடணும்! நீங்களும் வரீங்களா? பாட்டிகிட்ட சொல்லி உங்களுக்கும் தச்சி மம்மு தரேன்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!