ஸந்த்யாவந்தன
மந்த்ரங்கள்
(அர்த்தத்துடன்)
பாகம்-3
ப்ராணாயாம: ||3||
ஓம் பூ: | ஓம் புவ: | ஓகும் ஸுவ: | ஓம் மஹ:
| ஓம் ஜந: | ஓம் தப: | ஓகும்
ஸத்யம் ||
ஓம் தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
ஓமாபோ ஜ்யோதீ
ரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவ-ரோம் ||
மந்த்ரத்தின் அர்த்தம்:
ப்ராணாயாமம் (மூச்சின் ஆட்சி):
(ஓம் பூ:) ஓம்காரமே பூலோகம்; (ஓம் புவ: ) ஓம்காரமே புவர்லோகம்; (ஓகும் ஸுவ: ) ஓம்காரமே ஸுவர்லோகம்; (ஓம் மஹ: ) ஓம்காரமே மஹர்லோகம்; (ஓம் ஜந: ) ஓம்காரமே ஜநலோகம்; (ஓம்
தப: ) ஓம்காரமே தபோலோகம்; (ஓகும் ஸத்யம்)
ஓம்காரமே ஸத்யலோகம்
(ஓம்) ஓம்காரப்
பொருளான, (ய: ) எந்த பரமாத்மா (ந: ) நம்முடைய (திய: ) புத்தி மற்றும் சக்திகளை (ப்ரசோதயாத்) தூண்டுகிறாரோ, (தத்) அந்த
(ஸவிது) அனைத்தையும் படைக்கிறவரான (தேவஸ்ய) பகவானுடைய (வரேண்யம்)
சிறந்த (பர்க்க: ) ஜ்யோதிஸ்வரூபத்தை (தீமஹி)
த்யானிப்போம். (ஓம்) ஓம்காரமே
(ஆப:) ஜலமும் (ஜ்யோதி:)
ஒளியும் (ரஜ:) ரஸம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும் (அம்ருதம்) உயிருக்கு ஆதாரமான வாயுவும் (ப்ரஹ்ம) எங்கும் பரந்த ஆகாசமும். (பூர்ப்புவஸ்ஸுவ-ரோம்) பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதிகள் குறிப்பிடும் மனம், புத்தி, அஹங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே!
ஓம்காரமே பூலோகம்; ஓம்காரமே புவர்லோகம்; ஓம்காரமே ஸுவர்லோகம்; ஓம்காரமே மஹர்லோகம்; ஓம்காரமே ஜநலோகம்; ஓம்காரமே தபோலோகம்; ஓம்காரமே ஸத்யலோகம்.
ஓம்காரப் பொருளான, எந்த பரமாத்மா நம்முடைய புத்தி மற்றும் சக்திகளைத் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜ்யோதிஸ்வரூபத்தை த்யானிப்போம்.
ஓம்காரமே ஜலமும் ஒளியும்; ரஸம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும்; உயிருக்கு ஆதாரமான வாயுவும்; எங்கும் பரந்த ஆகாசமும். பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதிகள் குறிப்பிடும் மனம், புத்தி, அஹங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே!
இந்தப் ப்ராணாயாமத்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்:
ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் மடக்கி, கட்டைவிரல் மற்றும் பவித்ர விரல்களால் மூக்கை இருபுறமும் தொட்டுக் கொண்டு, வலதுபக்கம் (கட்டைவிரலால்) அழுத்தி, இடதுபக்கம் மெதுவாக மூச்சை இழுத்துப் பின் இருபுறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி, முடிவில் வலதுபக்கம் மெதுவாக மூச்சை விடவேண்டும்.
இழுப்பது “பூரகம்”, நிறுத்துவது “கும்பகம்”, விடுவது “ரேசகம்” எனப்படும். பூரக-கும்பக-ரேசகத்தின் கால அளவை 1:3:2 என்ற விகிதத்தில் இருத்தல் சிறந்தது. பூரக-கும்பக-ரேசக மூன்றும் சேர்ந்தது ஒரு ப்ராணாயாமம். “ஓம் பூ:” முதல் “தியோ யோ ந: ப்ரசோதயாத்” வரை ஸ்மரித்துக் கொண்டு பூரகமும்; “ஓமாபோ ஜ்யோதீ ரஸோ”விலிருந்து தொடங்கி இரண்டாவது முறை “ஓம் பூ: ஓம் புவ: --- பூர்ப்புவஸ்ஸுவரோம்” முடிய ஸ்மரித்துக் கொண்டு கும்பகமும்; மூன்றாம் முறை “ஓம் பூ:” முதல் முடிவு வரை மந்த்ரத்தை ஸ்மரித்துக் கொண்டு ரேசகமும் செய்து பழகினால், 1:3:2 என்ற கால விகிதம் சரியாக வரும்.
இவ்வாறு செய்து முடித்தபின் ப்ராணாயாமம் செய்த விரல்களால் வலது காதைத் தொட்டுக் கொள்ள வேண்டும். வலது காதில் கங்கை குடியிருப்பதாக ஐதீகம். எனவே, ப்ராணாயாமம் செய்த விரல்களால் வலது காதைத் தொட்டுக் கொள்ள வேண்டும்.
ஸந்த்யாவந்தநத்தின் ஒரு பகுதியாக ப்ராணாயாமத்தை வைத்திருப்பதன் மூலம் நமது முன்னோர்கள் நமது உடலை ஸர்வவ்யாதிகளிலிருந்து முற்றிலுமாக விலக்கி, நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகுத்திருந்தனர். அவர்களுக்கு என்னுடைய ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்!
அடுத்த பகுதியில் ஸந்த்யாவந்தனத்தை ஆரம்பிப்பதற்கான ஸங்கல்ப மந்த்ரம் குறித்து சிந்திப்போம்!